பேசன் ஆம்லெட்


பேசன் ஆம்லெட்
காலையில் முட்டையை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் அந்த முட்டையை வேக வைத்து சாப்பிடுவது தான் சிறந்தது. ஆனால் பலருக்கு முட்டையை வேக வைத்து சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்கள் காலையில் ஆம்லெட் போட்டு சாப்பிடலாம். அதுவும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், முட்டையை கடலை மாவுடன் சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிடலாம். இங்கு அந்த பேசன் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்: கடலை மாவு - 1 1/2 கப்முட்டை - 3 (நன்கு அடித்துக் கொள்ளவும்)தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)பச்சை மிளகாய் - 3-4 (பொடியாக நறுக்கியது)இஞ்சி - 1/2 (நறுக்கியது)பூண்டு - 6 பற்கள் (நறுக்கியது)சீரகம் - 1 டீஸ்பூன்கொத்தமல்லி - சிறிது செய்முறை: முதலில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், சீரகம், கொத்தமல்லி மற்றும் தக்காளி சேர்த்து, அத்துடன் அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தேய்த்து, கலந்து வைத்துள்ள கலவையை ஆம்லெட்டுகளாக சுட்டு எடுத்தால், பேசன் ஆம்லெட் ரெடி!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!