இடுகைகள்

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! பல உடல்நல பயன்களை கொண்டுள்ள எளிய மூலப்பொருளான பூண்டு இல்லாமல், இந்தியா உணவுகள் முழுமை அடையாது. மிகவும் திடமானதாகவும், கசுப்புத்தன்மையுடனும் இருந்தாலும் கூட, அது சேர்க்கப்படும் உணவில் அதீத சுவை மணம் கூடும். அதேப்போல் அதன் மருத்துவ குணங்களைப் பற்றி குறிப்பிடாமல், பூண்டை பற்றிய விளக்கம் நிறைவு பெறாது. நினைவிற்கு எட்டாத காலம் முதல், பல வித நோய்கள் மற்றும் மருத்துவ நிலைகளை தடுக்கவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும், இந்த அதிசய மூலிகை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது.பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்!!!பூண்டை நன்றாக நறுக்கினாலோ அல்லது துண்டு துண்டாக வெட்டினாலோ அல்லது மசித்தாலோ அல்லிசினால் கிடைக்...

பேசன் ஆம்லெட்

பேசன் ஆம்லெட் காலையில் முட்டையை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் அந்த முட்டையை வேக வைத்து சாப்பிடுவது தான் சிறந்தது. ஆனால் பலருக்கு முட்டையை வேக வைத்து சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்கள் காலையில் ஆம்லெட் போட்டு சாப்பிடலாம். அதுவும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், முட்டையை கடலை மாவுடன் சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிடலாம். இங்கு அந்த பேசன் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்: கடலை மாவு - 1 1/2 கப்முட்டை - 3 (நன்கு அடித்துக் கொள்ளவும்)தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)பச்சை மிளகாய் - 3-4 (பொடியாக நறுக்கியது)இஞ்சி - 1/2 (நறுக்கியது)பூண்டு - 6 பற்கள் (நறுக்கியது)சீரகம் - 1 டீஸ்பூன்கொத்தமல்லி - சிறிது செய்முறை: முதலில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், சீரகம், கொத்தமல்லி மற்றும் தக்காளி சேர்த்து, அத்துடன் அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர...

வாழைப்பழ முட்டை தோசை

வாழைப்பழ முட்டை தோசை காலையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ஏதேனும் காலை உணவு செய்ய நினைத்தால், வாழைப்பழ முட்டை தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மேலும் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், இதனை உட்கொள்வதும் நல்லது.சரி, இப்போது வாழைப்பழ முட்டை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!தேவையான பொருட்கள்:நன்கு கனிந்த வாழைப்பழம் - 1முட்டை - 2சர்க்கரை/உப்பு - தேவையான அளவுதேங்காய் எண்ணெய் - தேவையான அளவுசெய்முறை:முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.பின்னர் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.பின்பு இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து, அத்துடன் சர்க்கரை/உப்பு சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ளவும்.பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள கலவையை தோசைகளாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வாழைப்பழ முட்டை தோசை ரெடி!!!

தேனை பற்றியும், லவங்கப்பட்டை பற்றியும் உங்களுக்கு என்ன தெரியும்?

தேனை பற்றியும், லவங்கப்பட்டை பற்றியும் உங்களுக்கு என்ன தெரியும்? தேன் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் இனிப்பான பொருள்; லவங்கப்பட்டை என்பது சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மசாலா பொருளாகும். இது தான் பெரும்பாலானோரிடம் இருந்து வரும் பதிலாக இருக்கும். வெகு சிலருக்கே அதையும் மீறி அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் இவை இரண்டும் சேரும் போது நீங்கள் நினைத்ததை விட இன்னும் பல உடல்நல பயன்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?பொதுவாக உடல் எடையை குறைக்க அல்லது அதிகரிக்க தேன் பயன்படும் என தான் பலரும் நினைக்கின்றனர். இது போக சர்க்கரைக்கு பதில் அதனை ஒரு மாற்றாக பயன்படுத்தலாம் என்பதும் அவர்களின் எண்ணம். ஆனால் தேனும் லவங்கப்பட்டையும் சேரும் போது சாதாரண சளி முதல் புற்றுநோய் வரை குணமாகும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் மருத்துவ குணங்கள் நிறைந்து வழியும் இதனை பல பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர். தேன் மற்றும் லவங்கப்பட்டையில் உள்ள குணப்படுத்தும் குணங்கள் பற்றிய விவரங்கள்...

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால்,

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்வி பட்டிருப்போம். ஏனெனில் ஆப்பிளில் அந்த அளவில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என்று உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சத்துக்கள் உடலை வலுவோடு வைப்பதுடன், எந்த நோயும் உடலைத் தாக்காத வகையில் நோயின்றி ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. அதனால் தான், நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் செல்லும் போது, ஆப்பிளை வாங்கிச் செல்கின்றனர். இத்தகைய ஆப்பிள் உடலை ஆரோக்கியத்துடன் மட்டுமின்றி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவியாக உள்ளது. சிலருக்கு ஆப்பிள் சாப்பிட பிடிக்காது, அவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் ஆப்பிளை ஜூஸ் போட்டு வேண்டுமென்றாலும் குடிக்கலாம். நாம் ஆப்பிள் எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அந்த அளவில் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக ஆப்பிளானது உடல் எடையை குறைக்கவும், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. சரி, இப்போது அந்த ஆப்பிளை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்று பட்டியலிட்டுள்...

ஆரஞ்சு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

ஆரஞ்சு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தின் முழுமையான நன்மைகளைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அனைவருக்கும் தெரிந்த ஒரு நன்மையென்றால், அதில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால், அதனை அதிகம் சாப்பிட்டால், சருமம் நன்கு பொலிவுடன் இருக்கும் என்பது மட்டும் தான். ஆனால், ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். குறிப்பாக ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட வேண்டும். இப்போது அந்த ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதால், வேறு என்ன நன்மைகளைப் பெறலாம் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இனிமேல் ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள். புற்றுநோய் ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற...

சிந்தனை துளிகள்...

சிந்தனை துளிகள்... * 'கடன்காரன் ' ஆவதை விட' பிழைக்கத் தெரியாதவன்' எவ்வளவோ மேல் . * டை' கட்டிய பணக்காரனை விட 'கை' கட்டாத ஏழை எவ்வளவோ மேல் . ... * 'கெட்டவன்' ஆவதைவிட 'கையாலாகாதவன்' எவ்வளவோ மேல் . * 'வல்லவன்' ஆவதைவிட ' நல்லவன்' எவ்வளவோ மேல் . * குற்றம் புரியும் 'அதிபுத்திசாலி' யை விட ஒன்றுமறியாத 'முட்டாள்' எவ்வளவோ மேல் . * 'காதலி' க்காக உயிரை விடுபவனை விட 'கட்டியவளை' காதலிப்பவன் எவ்வளவோ மேல் . * புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் 'ஹீரோ' வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த 'காமெடியன்' எவ்வளவோ மேல் . * மாதர்தம்மை இழிவு செய்யும் 'மதயானைகளை' விட நெறி தவறாத 'எறும்பு' எவ்வளவோ மேல் . * வெற்றிகளி ன் 'கர்வங்களை' விட தோல்வியிலும் 'நம்பிக்கை' எவ்வளவோ மேல் . * பொய்யான 'புரட்சி' களைவிட அமைதியான 'அன்பு' எவ்வளவோ மேல்

புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்

படம்
புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள் புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு இந்த போஸ்ட்டை போடுறேன் (அப்பாவி ஆண்கள்லாம் என்னை மன்னிச்சுடுங்க..). 1. கல்யாணம் நிச்சயமான புதுசுல பர்த்டே, லவ்வர்ஸ் டே, வுமன்ஸ் டேன்னு ஏதேதோ சாக்கு சொல்லி வீட்டுக்கு வருவீங்க. ஆனால், கல்யாணம் ஆகிட்டாலோ எங்க பர்த்டே கூட மறந்து போகுதே! நிஜமாவே எங்களைத்தான் பார்க்க வருவீங்களா? இல்லை மச்சினிச்சியை பார்க்க வந்தீங்களா? 2. மீட்டர் 25 ரூபாய்க்கு மேல துணி எடுத்து சட்டை போடாத கஞ்சூஸ் நீங்க, மாமனார் துணி எடுக்கும்போது மட்டும் பார்க் அவென்யூ சர்ட்டும், ரேமாண்ட் ஃபேண்டும் தவிர வேறேதும் போடாத மாதிரி சீன் போடுறிங்களே எப்படி? 3.உங்க வீட்டு விசேஷத்துக்கு மட்டும் ஒரு வாரத்துக்கு லீவ் கிடைக்குது. ஆனால், எங்க வீட்டு விசேசத்தன்னிக்கு மட்டும் ஆடிட்டர் வந்துடுறார், இண்டெர்வியூ, மீட்டிங்க் ஏதாவது வந்துதுடுதே அதெப்படிங்க? 4. உங்க வீட்டு விசேசத்துல வாசல்ல வாழைமரம் கட்டுறது முதற்கொண்டு , மிச்சம் மீதி மளிகை சாமான் வண்டில ஏத்தி வீட்டுக்கு கொண்டு வந்து இறக்கும் வரை மாடா வேலை செய்யும் நீங்...

அறிந்துகொள்வோம்...!

படம்
அறிந்துகொள்வோம்...! * மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2பாக்கெட் சிகரெட் உபயோகிப்பதற்கு சமமானது. * இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம். ... * நீங்கள் கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால் அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும். * பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசுகின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர். * இந்தியாவில் மில்லியன் மக்களுக்கு 11 ஜட்ஜ் மட்டுமே உள்ளனர்.இப்போதுவழக்கில் உள்ள எல்லா கேஸுக்களை முடிக்க 466 ஆண்டுகள் பிடிக்கும். * நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும் * காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்திஆகியவற்றின் சிறப்பான கலவைகளால் தான். * உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான். * ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. * மனித உடலில் இரத்த ஓட்டம் ...

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை

படம்
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் !!! வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. * பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். * சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லதுவாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும். * சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது. * ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள். * ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும். * ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் ...

CUT,COPY, PASTE செய்வதை தடுக்க

படம்
FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம். அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும். நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும். இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது. ... இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட image "1" தோன்றும். இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க. தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட image 2 தோன்றும். இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும். image "3" உள்ள படத்தை பார்க்க. உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl...

அடிக்கடி பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க....!!!

படம்
அடிக்கடி பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க....!!! ஒரு அதிர்ச்சி மற்றும் எச்சரிக்கை ரிப்போர்ட் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடு ... ல்ஸ், கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும் புது டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக சோதனைக்கு தேர்ந் தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அவசர உணவுகள் இரண்டு நிமிடத்தில் தயாரித்து விடலாம் என்று விளம்பரப்படுத்தப் படுகிறது. மேகி, டாப் ராமன் நூடுல்ஸ். இதன் சுவை குழந்தைகளை அதிகம் கவர்கிறது என்பது உண்மைதான். புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த இந்த நூடுல்ஸ்சினை ரசித்து சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கம். இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்பு வகையும், உப்பு, சர்க்கரையும் அதிகம் கலந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ப்ரைடு சிக்கன் மெக் டொனால்ட்ஸ்...

ஜீரணிக்க எத்தனை மணி நேரம்

நீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க எத்தனை மணி நேரம் பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! சைவம் : * பழச்சாறு - 15 முதல் 20 நிமிடங்கள் ... * கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை - 20 முதல் 30 நிமிடங்கள் * ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் - சுமார் 40 நிமிடங்கள் * காலிஃப்ளவர், சோளம் - சுமார் 45 நிமிடங்கள் * கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் - சுமார் 50 நிமிடங்கள் * அரிசி, ஓட்ஸ் - சுமார் ஒன்றரை மணி நேரம் * சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி - சுமார் 2 மணி நேரம் அசைவ உணவுகள் : * மீன் - அரை மணி நேரம் * முட்டை - 45 நிமிடங்கள் * கோழி - 2 மணி நேரம் * வான் கோழி - இரண்டரை மணி நேரம் * ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி - சுமார் 3 முதல் 4 மணிநேரம்...

நிபந்தனையை விதித்துவிட்டு

ஒரு அரசனுக்கு தீடிரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.. அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்.. அதறக்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான முடியும்.. அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்.. அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான்.. தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது.. ... ”நான் உன்பின்னால் வருவேன்..நான் இடது பக்கம் திரும்பு என்றால்இடது பக்கம் திரும்ப வேண்டும்..வலது பக்கம் திரும்பவேண்டும்.வலதுபக்கம் திரும்ப வேண்டும்…நீ நடப்பதை நிறுத்தக்கூடாது..நடந்து கொண்டே இருக்கவேண்டும்..எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது.”.எனகிறது.. முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது.. தீடிரென பின்னால்வரும்தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை .. என்னாயிற்று..என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான்.. நிபந்தனையை மீறிவிட்டான்.. கற்சிலையாகிவிடுகிறான். அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்.. கிட்டத்ட்ட நிபந்னைகளுக்கு உட்ப்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான்.. தீடிரென சிரிப்பு ஒலிகேட்கிறது. ஆர்வம் மிகுதியால் த...

உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க / கண்காணிக்க ஒரு இலவச ஆப்ஸ்.

படம்
உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க / கண்காணிக்க ஒரு இலவச ஆப்ஸ். பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் மடியில் நெருப்பு கட்டி கொண்டுதான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக் ... கிறார்கள். அவர்களின் கவலையை போக்க பி ஸேஃப் என்னும் புது வகை ஆப்பை ஆன்ட்ராயிட் / ஆப்பிள்பிளாட்பாரத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் பிள்ளைகளின் மொபைல் ஃபோனில் இதை இன்ஸ்டால் செய்து விட்டால் – கொஞ்சம் கவலை இல்லாமல் இருக்கலாம். இதன் மூலம் உங்களின் பிள்ளைகளை நீங்கள் துல்லியமாக கண்காணிக்க முடியும். அவர்கள் எங்கு இருக்கின்றனர் எங்கு செல்கின்றனர் – ஏதாவது ஒரு இடத்தில் அதிக நேரம் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறார்களா என்று வீட்டின் கணனியில் நீங்கள் அவர்கள் இருக்கும் ஊர் – தெரு – கதவிலக்கம் முதற் கொண்டு பார்க்க முடியும். அது போக இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்திருக்கும் பிள்ளைகள் தங்களுக்கு ஏதாவாது விபரீதம்ஏற்படுகிறது என உணர்ந்தால் இதில் உள்ள கார்டியன் அலர்ட் – “Guardian Alert” என்ற பொத்தானை அழுத்தினால் உங்களுக்கு அவர்கள் ஆபத்தில் உள்ளார்கள் என இலவசமாக தகவல் வரும். இந்த அலெர்ட் வசதி பெற்றோர் அல்லது பலநண்பர்...

பயனுள்ள 33 சிறப்பு குறிப்புகள்

பயனுள்ள 33 சிறப்பு குறிப்புகள் 1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள். 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும் 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது. 7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம் 8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்து கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை. 9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு. 10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார். 11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள். 12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆ...

ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி?

படம்
ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி? அதனால் ஏற்படும் நண்மைகள் மற்றும் தீமைகள் ----------------------------------------------------------------------------------------- ஆண்ட்ராயிட் மொபைலில் ROOT செய்வது என்று கூறுகிறார்களே அப்படி என்றால் என்ன என்ற கேள்வி பொதுவாக பலரிடமும் காணப்படுகிறது ... அதற்க்கான தெளிவான பதிப்புதான் இது. ஆண்ட்ராயிட் மொபைலை உபயோகிப்பவர்களின் எண்னிக்கை உலகில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதற்க்கான APPLICATIONகளின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே இருக்கிறது ஆனால் பல முக்கியமான APPLICATIONகள் ROOT செய்யப்பட்ட மொபைல்களில் மட்டுமே இயங்கக்கூடிய தன்மையை பெற்றிக்கிறது உதாரணமக TITANIUM BACKUP, ROOT BROWSER, FONT INSTALLER, SCREEN RECORDER இன்னும் பல அதனால்தான் மொபைலை ROOT செய்ய பலரும் விரும்புகிறார்கள் ஆனால் அதை செய்வதினால் நன்மைகள் மற்றும் கிடைக்கப்படுவதில்லை தீமைகளும் அதில் இருக்கின்றது என்பதை தெழிவு படுத்ததான் இந்த பதிப்பு இதை எவ்வளவு சுருக்கமாக சொல்ல முடியுமோ அவ்வளவு முயற்ச்சிக்கிறேன் உங்களின் பயனுக்காக ROOT செய்வதினால் ஏற்படும் தீமைகள்: இதை தெ...

உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை

படம்
உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை திராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதையே உலர் திராட்சை என்கிறார்கள். மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது. உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன.மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது. ... சத்துக்கள் - பலன்கள்: இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது. இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள், கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உண...

INTERNET

படம்
இன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்ப்போம். ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது இன்டர்நெட்டில். உலகம் முழுவதும் தகவல் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மூலம் 1 நிமிடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நிகழ்கின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக்கில் ஒரு நிமிடத்திற்கு 2 லட்சத்தி 77 ஆயிரம் லாகின்கள் செய்யப்படுகின்றன. மனதில் தோன்றியவற்றை அப்பொழுதே நம்மை ட்விட் செய்ய சொல்லும் ட்விட்டரில் ஒரு நிமிடத்திற்கு 1 லட்சம் ட்விட்கள் செய்யப்படுவதோடு, 320-திற்கும் மேற்பட்ட ட்விட்டர் அக்கவுன்டுகள் உருவாக்கப்படுகின்றன. ஃபோட்டோ ஷேரிங் மூலமாக மனதில் பட்டென்று ஒட்டி கொள்ளும் ஃப்லிக்கரில் ஒரு நிமிடத்திற்கு 3 ஆயிரம் ஃபோட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன. 2 கோடி ஃபோட்டோக்கள் பார்க்கப்படுகின்றன. ப்ரொஃபெஷனல் தோரணையில் கலக்கும் லின்க்டுஇன் சமூக வலைத்தளத்தில் 100-க்கும் மேற்பட்ட அக்கவுன்டுகள் புதிதாக ஆரம்பிக்கப்படுகின்றன. 47 ஆயிரம் அப்ளிக...

உங்கள் Facebook பக்கத்தை யாரெல்லாம் பாக்கிறார்கள்

உங்கள் Facebook பக்கத்தை யாரெல்லாம் பாக்கிறார்கள் என்பதை அறிய வழி உங்கள் Facebook பக்கத்தை யார்? யார்? பார்கிறார்கள். கண்டுபிடிப்பதற்கு எளிமையான ஒரு வழி உள்ளது. ... இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் கணக்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே உள்ளதை பின்பற்றவும். முதலில் உங்களுடைய facebook account ஐ login செய்யவும். பின் உங்களுடைய profile page க்கு செல்லுங்கள்.அதன் பிறகு rigt click செய்யுங்கள். view page source என்ற option- யை கிளிக் செய்யுங்கள். தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும். இப்போது ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும். அந்த Search Bar இல் {“list” அல்லது friendslist என்று Type செய்து Enter செய்யவும். நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும். இது மாதிரி {“list””1000011 345400-2″, “10000043254566 -3″ என்று இருக்கும் ஒரு பெரிய listயே காட்டும். அதாவது இதில் 1000011345400 என்பது அவர்களுடைய fecebook account number ஒவ்...