உங்க ப்ளாக் பேர் என்னங்க?
உங்க ப்ளாக் பேர் என்னங்க? Posted: 04 Sep 2009 07:05 AM PDT சில ப்ளாகின் பெயர்கள் பச்சக் என்று மனதில் வந்து ஒட்டி கொள்கிறது. சிலது ரொம்பவும் சண்டிதனம் செய்கிறது. சிலதோ, நினைவில் இருந்தாலும், ஸ்பெல்லிங் மறந்து விடுகிறது. பொறுமையா இந்த இடுகையை படிச்சு பாருங்க. ஃபாலோ பண்ணினா கண்டிப்பா மறக்க மாட்டோம், மறந்தாலும் எடுத்துக்கலாம். ஆனா, எனக்கு சில சமயம் ரீடரை ஓப்பன் செய்ய சோம்பலாக இருக்கும். ரீடரில் படித்தால் ஈஸி தான், ஆனா, நல்ல இடுகைக்கு பின்னூட்டம் இட, நாம அவங்க ப்ளாகுக்கு தான் போகணும்.அதனால், நேரடியாவே போயிடுவேன். இதுல ஒரு சின்ன பிரச்சினை என்னன்னா, பின்னூட்டத்துக்கு ப்ளாக் ஆத்தர் தரும் பதில்! பலரும் ரொம்ப சின்சியரா பதில் தருவாங்க; ஒரு சிலர், மொத்தமாக சேர்த்து ஒரே பதில், நான் கூட சில சமயம் அப்படித்தான். ஒரு சிலர் பதிலே தர மாட்டாங்க. இதெல்லாம் பிரச்சினை இல்லை. ஆனா, பின்னூட்டம் இட்ட எத்துணை பேர்,மீண்டும் வந்து, ஆத்தர் அதுக்கு பதில் தந்திருக்காரானு பார்க்கிறாங்க??? நான் சில சமயம் பார்ப்பேன், பல சமயம் பார்ப்பதில்லை - பார்க்க ஆசை தான், ஆனா ப்ளாக் பேர் மறந்து போயிரும். ஃபாலோ அப் மெயில் ...