இடுகைகள்

ஆகஸ்ட் 10, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் மழை...

சங்கீதமாய், ரம்யமாய், பெண்மையாய், யாழிசையாய் இருக்கிறதுஉன் பெயர்.. அடைக்கலம் தருபவள் என்றுஅர்த்தமாம் உன் பெயருக்கு.. அதை உண்மையாக்குஎன் காதலுக்கு அடைக்கலம் கொடுத்து.. என் பெயரையாராவது கேட்டால் கூடஉன் பெயரை சொல்லிஅசடு வழிகிறேன்.. எந்த மொழியில் எழுதினாலும்அழகாய்த்தான் இருக்கிறதுஉன் பெயர்.. உன் பெயரை சொல்லியாராவது அழைத்தால்உனக்கு முன்னால் திரும்புகிறேன்அனிச்சையாய் நான்.. அழகு குழந்தைகளைபார்க்கும் பொழுதெல்லாம்உன் பேர் சொல்லியே கொஞ்சுகிறேன்.. என்னையுமறியாமல்.. உன் பெயர் தாங்கியசாலையோர பெயர் பலகைகள் மட்டும்அதிகமாய் மிளிர்கின்றன..காத்திருக்கிறேன்.. எப்போது வெளிவரும்?உன்பெயரில் தொடங்கும் திரைப்பாடல்! கவிதை ஒன்று எழுத நினைத்துகாகிதம் பல கசக்கி, கடைசியில்உன் பெயர் மட்டும் எழுதி முடிக்கிறேன், காவியம் எழுதிய திருப்தியில்.. காதல் மழை... காதலிப்பவர்கள்சொர்க்கத்தை அடைவார்கள்.. காதலிக்கப்படுபவர்கள்சொர்க்கத்தை உணர்வார்கள்.. ************** கலைந்து போன ஒரு மேகத்தின் கண்ணீர் துளி இந்த காதல் மழை.. நனைவோம் வாருங்கள்..

உன் பிரிவு,

உன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்என் அறை எங்கும் வியாபித்திருக்கிறது.. பின் இரவு நேரங்களில் அதுபேயாட்டம் ஆடுகிறது.. ஆழ் மனதில் அடுக்கி வைத்திருக்கும்உன் நினைவுகளை கலைத்து போடுகிறது.. உன் வாசனையை, அறை எங்கும்நிரப்பி மாயாஜாலம் செய்கிறது.. காதல் வலியால் துடிப்பதைகுரூரமாய் பார்த்து சிரிக்கிறது.. பயந்த குழந்தையாய் போர்த்தி படுக்கையில், பக்கத்தில் படுத்து கட்டி கொள்கிறது உன் பிரிவும். கண்ணை மூடி தூங்க முனைகையில், காதல் கதைகளை உரக்க பேசுகிறது. சிவந்த விழிகளோடு காலையில் பார்க்கையில், சாதுவாய் தூங்கி கொண்டிருக்கிறது அது. அதன் தூக்கம் கலைக்க வேண்டாம் எனஅறைக்கதவை மெதுவாய் சாத்தி விட்டு செல்கிறேன். உன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்என் அறை எங்கும் வியாபித்திருக்கிறது... *************** கண்ணீருடன்,

அழகி

உன்னை பார்த்த தேவர்கள் எல்லாம்பிரம்மனிடம் கோவிக்கிறார்கள்..ஏன் இப்படி ஒரு அழகியைதேவலோகத்தில் படைக்கவில்லையென... ********* நீ சோம்பல் முறிக்கும்அழகை பார்க்கவே தினம்சீக்கிரம் உதிக்கிறான்சூரியன். ***** இறந்த செல்கள் தான்நகமாக வளருமாம்..நீ நகம் கொறிக்கையில்இறந்த செல்கள் உயிர் பெறுகின்றன.. ***** இந்தியாவில் வசந்தகாலம்பிப்ரவரி மாதத்திலாம்..இருக்காதா பின்னேநீ பிறந்தது பிப்ரவரி 19. ***** என் வலது கண்ணில்விழுந்த தூசியை ஊதினாய் நீ..பொறாமையில் அழுகிறதுஎன் இடது கண்.. ****** நிலவு பூமியை சுற்றுகிறதா,இல்லவே இல்லை...பூமியில் இருக்கும்உன்னைத்தானே சுற்றுகிறது.. ******* காதலுடன்,