இடுகைகள்

டிசம்பர் 11, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! பல உடல்நல பயன்களை கொண்டுள்ள எளிய மூலப்பொருளான பூண்டு இல்லாமல், இந்தியா உணவுகள் முழுமை அடையாது. மிகவும் திடமானதாகவும், கசுப்புத்தன்மையுடனும் இருந்தாலும் கூட, அது சேர்க்கப்படும் உணவில் அதீத சுவை மணம் கூடும். அதேப்போல் அதன் மருத்துவ குணங்களைப் பற்றி குறிப்பிடாமல், பூண்டை பற்றிய விளக்கம் நிறைவு பெறாது. நினைவிற்கு எட்டாத காலம் முதல், பல வித நோய்கள் மற்றும் மருத்துவ நிலைகளை தடுக்கவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும், இந்த அதிசய மூலிகை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது.பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்!!!பூண்டை நன்றாக நறுக்கினாலோ அல்லது துண்டு துண்டாக வெட்டினாலோ அல்லது மசித்தாலோ அல்லிசினால் கிடைக்...

பேசன் ஆம்லெட்

பேசன் ஆம்லெட் காலையில் முட்டையை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் அந்த முட்டையை வேக வைத்து சாப்பிடுவது தான் சிறந்தது. ஆனால் பலருக்கு முட்டையை வேக வைத்து சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்கள் காலையில் ஆம்லெட் போட்டு சாப்பிடலாம். அதுவும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், முட்டையை கடலை மாவுடன் சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிடலாம். இங்கு அந்த பேசன் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்: கடலை மாவு - 1 1/2 கப்முட்டை - 3 (நன்கு அடித்துக் கொள்ளவும்)தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)பச்சை மிளகாய் - 3-4 (பொடியாக நறுக்கியது)இஞ்சி - 1/2 (நறுக்கியது)பூண்டு - 6 பற்கள் (நறுக்கியது)சீரகம் - 1 டீஸ்பூன்கொத்தமல்லி - சிறிது செய்முறை: முதலில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், சீரகம், கொத்தமல்லி மற்றும் தக்காளி சேர்த்து, அத்துடன் அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர...

வாழைப்பழ முட்டை தோசை

வாழைப்பழ முட்டை தோசை காலையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ஏதேனும் காலை உணவு செய்ய நினைத்தால், வாழைப்பழ முட்டை தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மேலும் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், இதனை உட்கொள்வதும் நல்லது.சரி, இப்போது வாழைப்பழ முட்டை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!தேவையான பொருட்கள்:நன்கு கனிந்த வாழைப்பழம் - 1முட்டை - 2சர்க்கரை/உப்பு - தேவையான அளவுதேங்காய் எண்ணெய் - தேவையான அளவுசெய்முறை:முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.பின்னர் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.பின்பு இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து, அத்துடன் சர்க்கரை/உப்பு சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ளவும்.பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள கலவையை தோசைகளாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வாழைப்பழ முட்டை தோசை ரெடி!!!

தேனை பற்றியும், லவங்கப்பட்டை பற்றியும் உங்களுக்கு என்ன தெரியும்?

தேனை பற்றியும், லவங்கப்பட்டை பற்றியும் உங்களுக்கு என்ன தெரியும்? தேன் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் இனிப்பான பொருள்; லவங்கப்பட்டை என்பது சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மசாலா பொருளாகும். இது தான் பெரும்பாலானோரிடம் இருந்து வரும் பதிலாக இருக்கும். வெகு சிலருக்கே அதையும் மீறி அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் இவை இரண்டும் சேரும் போது நீங்கள் நினைத்ததை விட இன்னும் பல உடல்நல பயன்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?பொதுவாக உடல் எடையை குறைக்க அல்லது அதிகரிக்க தேன் பயன்படும் என தான் பலரும் நினைக்கின்றனர். இது போக சர்க்கரைக்கு பதில் அதனை ஒரு மாற்றாக பயன்படுத்தலாம் என்பதும் அவர்களின் எண்ணம். ஆனால் தேனும் லவங்கப்பட்டையும் சேரும் போது சாதாரண சளி முதல் புற்றுநோய் வரை குணமாகும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் மருத்துவ குணங்கள் நிறைந்து வழியும் இதனை பல பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர். தேன் மற்றும் லவங்கப்பட்டையில் உள்ள குணப்படுத்தும் குணங்கள் பற்றிய விவரங்கள்...

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால்,

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்வி பட்டிருப்போம். ஏனெனில் ஆப்பிளில் அந்த அளவில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என்று உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சத்துக்கள் உடலை வலுவோடு வைப்பதுடன், எந்த நோயும் உடலைத் தாக்காத வகையில் நோயின்றி ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. அதனால் தான், நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் செல்லும் போது, ஆப்பிளை வாங்கிச் செல்கின்றனர். இத்தகைய ஆப்பிள் உடலை ஆரோக்கியத்துடன் மட்டுமின்றி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவியாக உள்ளது. சிலருக்கு ஆப்பிள் சாப்பிட பிடிக்காது, அவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் ஆப்பிளை ஜூஸ் போட்டு வேண்டுமென்றாலும் குடிக்கலாம். நாம் ஆப்பிள் எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அந்த அளவில் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக ஆப்பிளானது உடல் எடையை குறைக்கவும், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. சரி, இப்போது அந்த ஆப்பிளை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்று பட்டியலிட்டுள்...

ஆரஞ்சு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

ஆரஞ்சு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தின் முழுமையான நன்மைகளைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அனைவருக்கும் தெரிந்த ஒரு நன்மையென்றால், அதில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால், அதனை அதிகம் சாப்பிட்டால், சருமம் நன்கு பொலிவுடன் இருக்கும் என்பது மட்டும் தான். ஆனால், ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். குறிப்பாக ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட வேண்டும். இப்போது அந்த ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதால், வேறு என்ன நன்மைகளைப் பெறலாம் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இனிமேல் ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள். புற்றுநோய் ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற...

சிந்தனை துளிகள்...

சிந்தனை துளிகள்... * 'கடன்காரன் ' ஆவதை விட' பிழைக்கத் தெரியாதவன்' எவ்வளவோ மேல் . * டை' கட்டிய பணக்காரனை விட 'கை' கட்டாத ஏழை எவ்வளவோ மேல் . ... * 'கெட்டவன்' ஆவதைவிட 'கையாலாகாதவன்' எவ்வளவோ மேல் . * 'வல்லவன்' ஆவதைவிட ' நல்லவன்' எவ்வளவோ மேல் . * குற்றம் புரியும் 'அதிபுத்திசாலி' யை விட ஒன்றுமறியாத 'முட்டாள்' எவ்வளவோ மேல் . * 'காதலி' க்காக உயிரை விடுபவனை விட 'கட்டியவளை' காதலிப்பவன் எவ்வளவோ மேல் . * புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் 'ஹீரோ' வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த 'காமெடியன்' எவ்வளவோ மேல் . * மாதர்தம்மை இழிவு செய்யும் 'மதயானைகளை' விட நெறி தவறாத 'எறும்பு' எவ்வளவோ மேல் . * வெற்றிகளி ன் 'கர்வங்களை' விட தோல்வியிலும் 'நம்பிக்கை' எவ்வளவோ மேல் . * பொய்யான 'புரட்சி' களைவிட அமைதியான 'அன்பு' எவ்வளவோ மேல்