'வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்... தவிர்ப்பது எப்படி?
'வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்... தவிர்ப்பது எப்படி? டெக்னாலஜி ச.ஸ்ரீராம், படம்: ச.ஹர்ஷினி ச மூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்னைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றே! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் 'வாட்ஸ்ஆப்' எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்னைகள் பல. 'வாட்ஸ்ஆப் என்பது தனிநபர், தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே... இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?’ என்பது உங்களின் கேள்வியாக இருந்தால்... இதோ பதில் விரிவாக! என்னென்ன ஆபத்துகள்? தெரிந்தவரோ, தெரியாதவரோ... உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களின் செல்போன் நம்பர் கிடைத்தால் போதும்... அவர்களால் உங்கள் 'வாட்ஸ்ஆப்’ கணக்கைப் பார்க்கவும், அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும். உங்களுக்குத் தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களைத் தொடர முடியும். போலி பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து தோன்றும்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று உங்களால் உறுதிபடுத்த முடியாத சூழலில், அவர் உங...