சாயபு வீட்டு சரித்திரம் - 30
சாயபு வீட்டு சரித்திரம் - 30 Posted: 11 Dec 2009 06:50 AM PST (உலவும் மனிதர்களின் உண்மை கதை) "சுற்றம் பலப்பல சூழ்கையிலே வெற்றிக்கு அங்கு மாற்றேது?! சற்றும் கலங்கா வாழ்க்கையிலே முற்றும் என்பது கிடையாது!" காத்திருத்தல் ரொம்பவும் கஷ்டம் தான்... ஆனால், சில காத்திருத்தல்கள் சுகமானது, ரசித்து அனுபவிப்பது.... காதலிக்காக காதலன் காத்திருப்பதும், தன் வயிற்றுப் பிள்ளையைக் காண கர்ப்பிணி ஆவலோடு பார்த்திருப்பதும், நாள் குறித்தபின் திருமணத்துக்காகக் காத்திருப்பதும், மொட்டாக இருக்கும் ரோஜா மலர்வதற்காகக் காத்திருப்பதும், புதுமணத் தம்பதிகள் இரவுக்காகக் காத்திருப்பதும்....இப்படி பல காத்திருப்புகள் இனிமையானவை, சுவையானவை, உள்ளத்தோடு உரசி, நெஞ்சத்தோடு கதை பேசுபவை! இங்கேயும் காத்திருந்தாள் பாஜி, எலக்ஷன் ரிசல்ட்டுக்காக! எல்லாரும் எதிர்பார்த்தது வீண் போகவில்லை.... முடிவு, வெற்றி, வெற்றி, வெற்றி தான்! வாழ்த்து சொல்ல எல்லாரும் அவள் வீட்டுக்கு விரைந்தார்கள். எல்லாருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடினாள். "பாஜிக்கா.... உங்க அக்கா ரெண்டு பேரும் கவர்ன்மெண்ட் சர்வெண்ட் தான்.... ஆனா, கவர...