இடுகைகள்

செப்டம்பர் 6, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இளைச்சவனுக்கு எள்ளு’

இளைச்சவனுக்கு எள்ளு’ எனக் கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக் குறைபாடுள்ளவர்களுக்கு எள்ளு தேவை என்பதே இதன் அர்த்தம். எள்ளின் பயன்களைப் பற்றி நம்மவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க, அயல் நாடுகளில் எள்ளுக்கு செம கிராக்கி. எள்ளில் உள்ள சத்துக்கள் வெள்ளை எள்ளைக் காட்டிலும் நமது நாட்டில் விளையும் கறுப்பு எள்ளில்தான் அதிக சத்துக்கள் உள்ளன. மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால், சர்க்கரை நோயைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை அண்டவிடாமல் தடுக்கும். பைட்டோஸ்டீரால் (Phytosterols) எனப்படும் அரிய வகைச் சத்து இதில் இருக்கிறது. இது, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். செஸமைன் (Sesamine), செஸமொலின் (Sesamolin) ஆகிய லிக்னன் வகை சத்துக்கள் எள்ளில் இருந்து பிரிக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு மாத்திரை வடிவத்தில் அயல்நாடுகளில் கொடுக்கப்படுகிறது. எள்ளில் இருக்கும் பைட்டிக் அமிலம் இதயநோய்களைத் தடுக்க உதவுகிறது. தாமிரம் மிக அதிக அளவில் உள்ளது. 100 கிராம் எள்ளில், ஒரு நாளின் தேவையைக் காட்டிலும் நான்கு மடங்கு...