தலையணை சரியா... தவறா?
தலையணை சரியா... தவறா? உ ப்பில்லாத சாப்பாடுபோல்தான் இங்கு பலருக்கு தலையணை இல்லாத உறக்கமும். ‘‘தலையணை வைத்து உறங்குவது என்பது சுகமானதாக இருக்கலாம். ஆனால், அது உடலுக்குத் தீங்கானது என்கிறார், சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் புகழேந்தி. தலையணை ஏன் பயன்படுத்தக் கூடாது என்பது பற்றியும், பயன்படுத்தினால் நேரும் பாதிப்புகள் பற்றியும் இங்கே பேசுகிறார் டாக்டர். ''தலையணை என்பது ஆதிகால மனிதர்களிடமோ... அதற்கு பிறகு வந்த மனிதர்களிடமோ இல்லவே இல்லை. சாயும்போதும், உட்காரும்போதும் ஏதேனும் ஒன்றை ஒத்தாசையாக வைத்து, அதில் ஒருவித சுகத்தைக் கண்டு, அப்படியே தடிமனான பொருட்களைத் தலைக்கு வைத்துத் தூங்குவது வழக்கமாகியிருக்கிறது. இதுவும்கூட ராஜாக்கள், பணக்காரர்கள் என்று மட்டுமேதான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், கடந்த 40, 50 ஆண்டுகளில்தான் ஏழை, பணக்காரர் என்று அனைவரும் தலையணைக்கு அடிமையாகிவிட்டனர். இன்று அது வளர்ந்து விதவிதமான, வண்ண வண்ணமான தலையணைகள் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பிடித்திருக்கின்றன. நடக்கும்போது நாம் எப்படி நேராக நடக்கிறோமோ, அப்படித்தான் படுக்கும்போதும் சமமான தரையில் நேராகப் படுத...