இடுகைகள்

ஜூலை 26, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் ஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...... Posted: 25 Jul 2012 09:43 AM PDT சின்ன வயசுல மணலில வீடு கட்டி விளையாடாதவங்க யாரு இருக்க முடியும். இப்பவும் நான் மணலைப் பார்த்தா விளையாட ஆரம்பித்து விடுவேன். இப்படித்தான் கொச்சி போயிருந்தப்ப ஃபோர்ட் கொச்சியில் ஈர மணலைப் பார்த்ததும் உட்கார்ந்துவிட்டேன். என் மகள் மற்றும் மகனுடன் போட்டி போட்டுக் கொண்டு யார் அழகாக மணலில் சிற்பம் செய்றாங்கன்னு பார்க்கலாம் என்றேன். என்னவர் சரி நான் தீர்ப்பு சொல்கிறேன் என்றார். மூவரும் அவரவர் வயதுக்கு தக்கபடி உருவாக்கினோம். பள்ளி நாட்களின் ஞாபகம் என் கண் முன்னால் தோன்றியதால் பள்ளிச் சீருடையை நான் மணலில் உருவாக்கினேன். குழந்தைகளோடு குழந்தையாகிப் போனேன். இதோ அந்த மணல் சிற்பம். என் மகள் மிக்கி மவுஸும் என் மகன் மலையும் உருவாக்கினார்கள். மகனுக்கே ஜெயம் ஏனென்றால், நாங்கள் ஒரு முறை சிற்பம் செய்வதற்குள் அவன் அழித்து அழித்து ஐந்தாறு முறை கட்டிவிட்டான். ஆக அவனுடைய முயற்சிக்கு அங்கீகாரம் தர வேண்டுமல்லவா? மேலும் விவரங்களும் புகைப்படங்களும் இங்கே: Art of Growing Hill...