பாடி வாழ்க்கை - 3
பாடி வாழ்க்கை - 3 Posted: 07 Mar 2010 05:05 AM PST ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தின் மூன்றாம் நாள் இனிதே தொடங்கியது....! உற்சாக வெள்ளம் கரைபுரண்டோட, மாணவிகளின் முகத்தில், மகிழ்ச்சி நிறைந்திருந்தது...! காலையில் சீஃப் கெஸ்ட்டாக, அல் அமீன் பாலிடெக்னிக் காலேஜ் முதல்வர், திரு.ஜே.கமால் பாட்சா அவர்கள் உரையாற்ற, அதன் பின், முதலுதவி சிகிச்சை குறித்து, எங்களுக்கு, செயிண்ட்.ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அசோசியேஷனைச் சேர்ந்த, திருமதி.எஸ்.விஜயகுமாரி மற்றும், குமாரி.எம்.தாரணி ஆகியோர் சிறந்த முறையில் விளக்கமளித்தனர். இடையில் வாழக்காய் பஜ்ஜியும் காஃபியும் தரப்பட்டது. மதியம் சாப்பாடு, சாம்பார், ரசம், பொரியலுடன் ஜிலேபியும் தரப்பட்டது. என்ன சாப்பிட்டோம் என்பது முக்கியமாகத் தெரியவில்லை, ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு, ஒரே குடும்பமாகச் சாப்பிட்டது தான் பிரமாதம்! அதன் பிறகு, போட்டிகள் தொடங்கின! முதல் போட்டி, நெருப்பின்றி சமையல்! அதாவது, அடுப்பில் வைக்காமல், ரெடிமேடாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உருவாக்க வேண்டும். எங்கள் குழுவில், பிரட் கட்லெட், மிக்ஸட் நட்ஸ் மற்றும், பேரிச்சை அல்வா ஆகியன செய்திருந்தோம். பி...