’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் இணையத்தில் பணம் சம்பாதிக்க... Posted: 26 Jun 2010 01:50 AM PDT வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை நம்மில் பலருக்கும் உண்டு. அதிலும் இணையத்தின் மூலம் சம்பாதிக்க முடியுமா என்று தேடினால், பணம் கட்டுங்கள் வேலை தருகிறோம் என்று நிறைய விளம்பரங்கள் பார்க்கலாம். அதை நம்பி பணம் கட்ட பயமாக இருக்கும். அதை விட்டால், நமக்கு பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த ஒன்று கூகுள் ஆட்சென்ஸ் மட்டுமே. ஆனால், அதில் சாமானியர்கள் பெரிய வருமானமெல்லாம் ஈட்ட முடியாது. உங்களுக்கு ஆங்கில அறிவு இருந்தால்...அதாவது பிழையில்லாமல் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்தால், அதோடு, சற்று வேகமாக டைப் செய்ய முடியும் என்றால், தாராளமாக நமக்கான பாக்கெட் மணியை எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க முடியும். தேவை கொஞ்சம் கற்பனைத் திறனும் பொறுமையும் விடாமுயற்சியுமே! இந்த கட்டுரை அமேசான் டாட் காமின் எம்டர்க் பற்றியது. இது என்ன மாதிரியான ஒர்க் என்று தெரிந்து கொள்ள ஒரு சிறு உதாரணம் தருகிறேன். உங்க மகன் பள்ளியில் கட்டுரைப் போட்டிக்காக ஒரு சிறு கட்டுரை எழுதித் தரச் சொல்லுகிறான். 'தொலைக்க...