முள்ளங்கி
ஆரோக்கியப் பெட்டகம்: முள்ளங்கி முள்ளங்கியில் உள்ள சத்துகளையும் நல்ல விஷயங்களையும் பற்றி அறிந்தால், அது அத்தனை பேரின் உணவிலும் தினசரி இடம் பெறும் அவசியக் காயாக மாறும். ‘‘வாசனை பிடிக்காமல் முள்ளங்கியை வெறுப்பவரா நீங்கள்? தலை முதல் கால் வரை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் நன்மை செய்கிற முள்ளங்கியை வாசனைக்காக ஒதுக்குவது எத்தனை பெரிய தவறு தெரியுமா?’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ். ‘‘குறுக்கு வெட்டுக் காய்கறிகளில் முக்கியமானது முள்ளங்கி. வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ அதிகம் கொண்ட காய். இதிலுள்ள ஃபோலேட், நார்ச்சத்து, தாதுச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகிய அனைத்தும் முதுமைத் தோற்றத்துக்குக் காரணமான விஷயங்களில் இருந்து நம்மைக் காக்கக்கூடியவை. புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடிய குணம் முள்ளங்கியில் உள்ளது. முள்ளங்கியை பச்சையாகவோ, சமைத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். மாவுச்சத்து இல்லாத காய் இது என்பது குறிப்பிடத் தக்கது. சாலட்டுகளில் சேர்க்கும் போது, ஒருவித காரத் தன்மையுடன், நறுக்கென்ற ருசியை...