விமானம் பறப்பது எப்படி....? தெரிந்து கொள்வோம்
விமானம் பறப்பது எப்படி....? தெரிந்து கொள்வோம் அறிவியல் இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான். பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும். சரி… எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. how-airplane-landing ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift) B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag ஒரு விமானம் ஒரே உயரத்தில், நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமனாக இருக்க வேண்டும் Weight=Lift Drag=Thrust த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும். டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும் விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்...