இடுகைகள்

நவம்பர் 29, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாயபு வீட்டு சரித்திரம் - 28

படம்
சாயபு வீட்டு சரித்திரம் - 28 Posted: 28 Nov 2009 10:50 AM PST "அக்கா...நான் அநாதை ஆயிட்டேனே அக்கா...எனக்கு இனி யாரிருக்கா? யார் என்னை பார்த்துக்குவாங்க இனிமேல்?" ராசிதா கசிந்துருகி அழுதது காணமுடியவில்லை. கேன்சர் முற்றிய நிலையில் இருந்த தஸ்தகீர் ஆஸ்பத்திரியில் நாலு நாள் இருப்பதும், வீட்டுக்கு வருவதுமாக அல்லாடிய பின், நிரந்தரமாக ஓய்வு கொள்ள, தந்தை வழி சொந்தம் யாரும் ராசிதாவை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை! கடைசி நேரத்தில் தஸ்தகீர் என்ன நினைத்திருப்பாரோ? கச்சாமாவை தான் தவிக்க விட்டதற்கு பிணையாக, இன்று ராசிதா தனிமரமாக நிற்கிறாளே என்று மனதார வருந்தியிருப்பாரா?! பொறுமையின் சிகரமான கச்சாமாவை தனது சொல்லாலும் செயலாலும் நோவினை செய்ததற்கு, இன்று உடலாலும் மனதாலும் தாங்க முடியாத வேதனையை இறைவன் தந்துவிட்டான் என்று உணர்ந்திருப்பாரா?? கச்சாமாவின் மூன்று பெண்மக்களும் இன்று குடியும் குடித்தனமுமாக இருக்க, சின்னம்மா மக ராசிதா மட்டும் அநாதையாக நிற்கிறாள். "ராசிதா...நீ எங்கூட எங்க வீட்டுக்கு வா... மற்றதை அப்புறம் பார்க்கலாம்!" தகப்பனின் காரியங்கள் முடிந்ததும், மர்ஜியா அவளை தன்...