இடுகைகள்

அக்டோபர் 2, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பச்சரிசியா, புழுங்கலரிசியா? எது நல்லது?

பச்சரிசியா, புழுங்கலரிசியா? எது நல்லது? புழுங்கலரிசி என்பது நெல்லை அப்படியே வேக வைத்து எடுப்பது. இதனால் நெல்லின் தோலுக்கடியில் உள்ள வைட்டமின் பி மற்றும் நார்ச்ச ... த்து அப்படியே அரிசியில் தக்க வைக்கப்படும். ஆனால், பச்சரிசியில், உமியெடுக்கும் போது, அந்தச் சத்துக்கள் காணாமல் போகின்றன. எனவே, புழுங்கலரிசியே சத்தானது. கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, பாஸ்மதி அரிசி, கவுனி அரிசி, வரகு அரிசி, தினை அரிசி, சாமை அரிசி என இன்று ஏகப்பட்ட அரிசி வகைகள் கிடைக்கின்றன. இவை அத்தனையுமே ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருபவை. காரணம், இவை அனைத்திலும் கிளைசமிக் இன்டக்ஸ் (அதாவது, சாப்பிட்டதும் ரத்தத்தில் கலக்கும் ஆற்றல்) குறைவு. காலையில் இட்லியோ, தோசையோ சாப்பிடுகிறோம் என வைத்துக் கொள்வோம். அது 3 மணி நேரத்தில் செரித்து விடும். அரிசி உணவில் உள்ள சக்தியானது உடனடியாக ரத்தத்தில் கலந்து, சீக்கிரமே செரித்து விடுகிறது. சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 முதல் 110 தான் இருக்க வேண்டும். அரிசி உணவின் மூலம் ரத்தத்தில் சேர்கிற ஆற்றலானது, தேவைக்கதிகமாக இருக்கும்பட்சத்தில் அப்படியே சேமிக்கப்படுகிறது. இது சாதாரண...

உன்னை அறிந்தால்”

உன்னை அறிந்தால்” ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர். அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது. ... இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்,நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர். சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்ல...

உடலை ஆரோக்கியமாக வைத்துக்

இன்றைய காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள நிறையபேர் ... அதிகமாக முயற்சி செய்கிறார்கள். இதற்காக அவர்கள் டயட், பட்டினி கிடப்பது போன்றவற்றை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு டயட் என்ற பெயரில் பட்டினி கிடக்காமல் நாம் அன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டில் சிலவற்றை ஒதுக்கி சிலவற்றை சேர்த்து கொண்டாள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.. அவை என்னவென்று பார்க்கலாம். * நாம் சாப்பிடும் உணவில் எப்போதும் மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூள் சேர்த்து கொள்ளுங்கள் ஏனெனில் காரம் அதிகமாக சேர்க்க கூடாது. பச்சை மிளகாய் காரத்தை கண்டிப்பாக சேர்க்க கூடாது. * எண்ணெய் அதிகமாக உள்ள உணவினை தவிர்த்து விடுங்கள். அதாவது மாலை நேரத்தில் நொறுக்கு தீனிகளை சாப்பிடாமல் வேக வைத்த காய்கறிகள் மற்றும் தானிய வகைகளை சேர்த்து கொள்ளுங்கள். சூப் எடுத்து கொள்ளுங்கள். * சர்க்கரை சேர்க்காத பழ ஜூஸ் குடியுங்கள். சர்க்கரை சேர்த்தால் அதன் சத்து குறைந்து விடும். அதற்கு பதிலாக தேன், நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். * சாப்பிடும் சாப்பாடனாது ஆவியில் வேகவைத்த உணவுகளாக இருக்கட்டும். அதாவது இட்லி, இட...

சர்வரோக நிவாரணியாக வெண்டைக்காய்

படம்
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் கணக்கு நல்லா போடலாம் என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களை பார்த்துள்ளோம்.  வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதோ இல்லையோ அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு  வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணியாக வெண்டைக்காய் உள்ளது. ஆங்கிலத்தில் ‘லேடிஸ் ஃபிங்கர்ஸ்’ என வெண்டைக்காய் அழைக்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம்  வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. கர்ப்பத்ததில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின்  நரம்பு குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம். வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைத்தான். ஆனால் அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்ளவதில்லை.  உண்மையிலே அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து  அல்சர் பாதி...

வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய மருந்து கற்பூரவள்ளி

படம்
இந்தியா முழுவதும் கற்பூரவள்ளி விநியோகிக்கப்படுகிறது. இது தோட்டங்களில் பயிரிடப்பட்டு எந்த காலநிலையிலும் வளர்க்கலாம். இவற்றை தொட்டியிலும் வளர்க்கலாம். இந்த செடியின் இலையில் மருத்துவ மதிப்புகள் நிறைய உள்ளன. இதில் இயற்கையாக மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது முக்கியமாக சளி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும். இந்த இலையை மலேரியா காய்ச்சல், இருமல், ஆஸ்துமா சிகிச்சைக்கு உபயோகப்படுத்துகிறது. மேலும் இந்த இலையை மனிதர்கள் சாப்பிட்டால் மனித உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவு...

ஆரோக்கியப் பெட்டகம்: குடைமிளகாய்

படம்
பெயரில் மட்டுமே காரம்... ஆனால், உள்ளே இருப்பது அத்தனையும் காரத்துக்கு நேர்மாறான நல்ல குணங்கள். ‘சேரிடம் அறிந்து சேர்’ என்பதற்கு  எதிராக, எந்த உணவுடன், எப்படிச் சேர்த்தாலும் தன் தனித்தன்மையையும் விட்டுக் கொடுக்காமல், அதே நேரம் தனியாகவும் நிற்காமல் சுவை கூட்டும்  ஒரு காய் குடைமிளகாய். பச்சையாகவும் சாப்பிட ஏற்றது. சாம்பார், பொரியல் முதல் பீட்சா வரை எதனோடும் இணக்கமாகப் போவதுதான் இதன் சிறப்பு. குடைமிளகாயின் நல்ல விஷயங்களைப் பட்டியலிடுவதுடன், அதை வைத்து செய்யக்கூடிய இரண்டு புதுமையான ரெசிபிகளையும் பகிர்ந்து கொள்கிறார்  டயட்டீஷியன் மீனாட்சி பஜாஜ். ‘‘குடைமிளகாயை ஏன் விரும்ப வேண்டும்? இந்தக் கேள்விக்கு காரணங்கள் ஏராளம். பச்சை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு  என கண்களைக் கவரும் அதன் நிறமா? எந்த உணவுடனும் பொருந்திப் போவதுடன், பிரத்யேகமான மணம் மற்றும் சுவையுடன் தன் இருப்பை  உணர்த்தும் குணமா? ஏராளமான சத்துகளை உள்ளடக்கிக் கொண்டு, ஆரோக்கியத்துக்கு உதவும் தன்மையா? இத்தனை நல்ல தன்மைகளைத்  தன்னகத்தே கொண்டிருப்பதால்தான் குடைமிளகாய் பல நாடுகளிலும் பல பாணி சமையல்களிலும் இடம் பெற...

ஆரோக்கியப் பெட்டகம்: தக்காளி

படம்
வீட்டில் வேறு எந்தக் காய்கறி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தக்காளி இருந்தால் போதும்... சூப் செய்து குடிக்கலாம். ரசம் வைக்கலாம்.  தக்காளியை மட்டுமே சேர்த்து சாம்பார் வைக்கலாம். சாலட்டாக சாப்பிடலாம். அவசரப் பசிக்கு ஜூஸாக அடித்துக் குடிக்கலாம். இப்படி தக்காளியின்  பயன்பாடுகளை பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். வேறு எந்தக் காயாக இருந்தாலும் தொடர்ந்து 2 நாட்களுக்கு எடுத்துக் கொண்டாலே அலுத்துச்  சலிக்கும். ஆனால், தக்காளி இல்லாத சமையல் ஒரு நாளும் ருசிப்பதில்லை! ‘‘சுவையை மட்டுமின்றி, ஆரோக்கியத்துக்கான நிறைய நல்ல விஷயங்களையும் உள்ளடக்கியது தக்காளி’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்  புவனேஸ்வரி. இதோ அவர் தருகிற தக்காளித் தகவல்கள்... ‘‘மிகக் குறைந்த கலோரி கொண்ட காய்களில் ஒன்று தக்காளி. அதே நேரம் அதை ஊட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே சொல்லலாம்.   ஆரோக்கியத்துக்கு அவசியமான அத்தனை வைட்டமின்களையும் தாதுச்சத்துகளையும் தன்னகத்தே கொண்ட அருமையான காய் இது.  லிஹ்நீஷீஜீமீஸீமீ என்கிற மிகவும் சக்தி வாய்ந்த இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடன்ட் தக்காளியில் அபரிமிதமாக இரு...

புற்றுநோயை தடுக்கும் கொய்யா பூசணி

படம்
மலிவான விலையில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று கொய்யா. இந்த பழம் மலிவானது மட்டுமல்ல; பல்வேறு நன்மைகளையும் கொண்டது. 4 ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரேயொரு கொய்யாப்பழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கும். இதில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவையாகும். கொய்யாப்பழத்தில் வைட்டமின் ‘பி‘ மற்றும் ‘சி‘ ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன. கொய்யாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். கொய்யாப்பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட, அப்படியே கடித்து சாப்பிட்டால், பற்களும், ஈறுகளும் வலுவடையும். ஈறுகளில் வீக்கம் அல்லது வலி இருந்தால், கொய்யா மர...

கல்லீரல் அழற்சி தடுக்கும் சைவ உணவு!

படம்
கல்லீரல் அழற்சி தடுக்கும் சைவ உணவு! மனிதன் உயிர் வாழ முக்கிய உறுப்புகளில் கல்லீரல் முக்கியமானது. இக்கல்லீரலை பாதிக்கும் வைரஸ் கிருமிகள் ஹெபடைடிஸ் ஆகும். இதில் ஏ, பி,  சி, டி, இ என பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்னையை ஏற்படுத்தினாலும், அனைத்துமே கல்லீரலை பாதிக்கும் வைரஸ்  கிருமிகள் ஆகும். பொதுவாக கல்லீரல் பாதிக்கப்பட்டால், கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகும். கல்லீரல் அழற்சியை கடுமையான வகை,  நீடித்த கடுமையான வகை என்று இரண்டாக பிரிக்கலாம். கடுமையான வகை கல்லீரல் அழற்சி என்பது கல்லீரல் உறுப்பு மாற்றம் செய்ய வேண்டிய நிலைகூட வரலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டால் மஞ்சள் காமாலை நோய்  ஏற்படும். மேலும் காய்ச்சல், உடல் சோர்வு, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, பசியின்மை, புகை பிடிக்க  வெறுப்பு, அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, தோல் மஞ்சள் நிறமடைதல், வயிற்று வலி ஆகியவை இதன் அறிகுறிகள். நீடித்த கடுமையான வகை நீடித்த கடுமையான வகையில் பலருக்கும் ஹெபடைடிஸ் இருப்பது தெரியாது. கல்லீரல் சேதமடைந்துள...

தேன் எது அசல்?

படம்
தேன் எது அசல்? சமீப காலமாக நகரத்தின் எல்லா பிரதான ஏரியாக்களிலும் அந்தக் காட்சியைக் காண முடிகிறது. இரண்டு சக்கர வாகனங்களில் பிரமாண்ட அளவிலான தேனடையைச் சுமந்தபடி தேன் வியாபாரம் செய்கிறார்கள் இளைஞர்கள். பரம்பரையாக தேன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களைப் போன்றதான தோற்றம் அவர்களுடையது. அப்போது எடுத்தது மாதிரியான ஃப்ரெஷ்ஷான தேனடையைப் பார்க்கிற மக்களுக்கு, தேவையே இல்லாவிட்டால்கூட தேன் வாங்கும் ஆர்வம் தலைதூக்கும். தேனடையில் இருந்து ஃப்ரெஷ்ஷாக எடுக்கப்பட்ட தேன் எனச் சொல்லி, ஏற்கனவே பாட்டில்களில் நிரப்பி வைத்திருக்கிற தேனை, லிட்டர் 200 ரூபாய் வரைக்கும் விற்கிறார்கள். சுத்தமான தேனாச்சே என்கிற நம்பிக்கையில், காசு அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என லிட்டர் கணக்கில் தேன் வாங்கிச் செல்கிறார்கள் மக்கள். கிடைத்தற்கரிய பொருளை வாங்கி வந்து விட்ட மகிழ்ச்சியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் அடுத்த சில வேளைகளுக்கு தேனாபிஷேகம் செய்யாத குறையாக எல்லா உணவுகளிலும் தேன் சேர்த்துக் கொடுப்பார்கள். இரண்டு, மூன்று நாட்களில் அரை பாட்டிலுக்கும் மேல் காலியாகி இருக்கும். மிச்சமிருக்கும் தேன், மெல்...

மூலநோயை தடுக்கும் நாவல்பழம்

படம்
மூலநோயை தடுக்கும் நாவல்பழம் பழங்கள் மனிதனுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தருபவை. நோய்கள் அணுகாதவாறு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியவை. பழங்கள்  நாவுக்கு சுவையையும், மணத்தையும் கொடுத்து உடலுக்கு வலுவையும் கொடுக்கிறது. இந்த வகையில் நாவல்பழத்தின் மருத்துவ பயன்களை பற்றி  அறிந்து கொள்வோம். நாவல்பழத்தின் பயன்பாடு அவ்வையார் காலத்தில் இருந்தே வந்திருப்பதை பல புராண கதைகள் மூலம் நாம் அறிந்திருப்போம்.  நாவலில் கொடிநாவல், குழிநாவல், கருநாவல், சம்புநாவல், நாட்டு நாவல் என பல வகைகள் உள்ளன. ஏரிக்கரைகளிலும், கண்மாய், குளக்கரையிலும் நாவல்மரம் பெரிதாக வளர்ந்திருக்கும். தற்போது நவீன தொழில் நுட்பத்தால் நாவல்பழம் பெரியதாகவும்,  அதிகமாகவும் விளைவிக்கப்படுகிறது. நாவல் மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவ பயன் கொண்டவை. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ்,  இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் சிறப்பம்சமாக இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவையும் நிறைந்துள்ளது. நாவல்பழத்தின் துவர்ப்பு சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் ரத்தத்தை சுத்...

ஆரோக்கியப் பெட்டகம்: பாகற்காய்

படம்
ஆரோக்கியப் பெட்டகம்: பாகற்காய் பெயரைக் கேட்டவுடனேயே கசப்பை சாப்பிட்டதைப் போல நமது முகம் சுருங்கும். ஆனால், உண்மையில் மிகவும் சிறந்த காய்கறிகளில் இது பிரதானமானது. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட காயும் இதுவே. இதில் உடலுக்கு பலன் தரும் விஷயங்கள் பல உள்ளன. இதை சாப்பிடும்போது நமது நாக்குக்குத்தான் கசப்பு தெரியும். ஆனால், உடலுக்கு இது அளிக்கும் பலன்கள் அதிகம். தலை முதல் கால் வரை இதனால் கிடைக்கும் பலன்கள் பலப் பல! “கசப்பை சகித்துக் கொண்டு அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சாதாரண புண்கள் முதல் உயிரைக் கொல்லும் புற்றுநோய் வரை நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும்...’’ என்கிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி மைய மருத்துவர் யாழினி. பாகற்காயின் பயன்களைப் பட்டியலிடுவதோடு, வாய்க்கு ருசியான மூன்று பாகற்காய் ரெசிபிகளையும் செய்து காட்டியிருக்கிறார் அவர். ‘‘ஆயுர்வேதம் உணவை மருந்தாகக் கருதுகிறது. கசப்புத் தன்மை இருந்தாலும், இதில் பல வகையான இந்திய உணவுகளை சமைக்க முடியும். பாகற்காயில் உடலுக்கு நலன் தரும் பல விஷயங்கள் உள்ளன.  இதில் பல்வேறு நலன் தரும் காரணிகள் உள்...

வெற்றிலையின் மருத்துவப் பயன்கள்

படம்
வெற்றிலையின் மருத்துவப் பயன்கள் வெற்றிலைச்சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடன் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு  பிரியும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும். குழந்தைகளுக்கு வரும் ஜுரம், ஜன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில், கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன்  கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும். வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை  கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால்  வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தேய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும். வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக...

வாழ்நாளை நீட்டிக்கும் முட்டைகோசு

படம்
வாழ்நாளை நீட்டிக்கும் முட்டைகோசு நாம் உண்ணக்கூடிய உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்ககூடிய காய்கறிகளில் 'முட்டைகோசு' முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால் இதை உணவில் அளவோடு பயன்படுத்தி வர நமக்கு கிடைக்கும் பயன்களோ ஏராளம். முதலில் இதன் பயன்களை தெரிந்து கொண்டு இதை பயன்படுத்துவதோ, வேண்டாமா என்ற முடிவுக்கு வாருங்கள். இது குளிர்மண்டல பகதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறிய செடி வகையைச் சார்ந்தது. இலைகள் நன்றாக பெருத்து காணப்படும். இலைகள் நன்றாக சருண்டு உருண்டை வடிவில் இருக்கும். இவைதான் நாம் உண்ணக்கூடிய பகுதியாகும். வெளிப்பக்கத்திலிருக்கும் இலைகள் பச்சை நிறத்திலும், உட்பக்கத்திலிருக்கும் இலைகள் வெளிர் பச்சை நிறத்திலும் காணப்படும். பயன்கள்: இதன் குணம் குளிர்ச்சியாகும், ஆதலால் முட்டைக்கோசானது சிறுநீரை பெருக்கி வெளியேற்றும் தன்மையுடையது. ஜலதோஷத்தினால் துன்பப்படுபவர்கள் முட்டைக்கோஸை நன்றாக  வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை இதை பயன்படுத்தினால் அத்தொல்லையிலிருந்து வெளியேறலாம்....

ஆரோக்கியப் பெட்டகம் : சர்க்கரைவள்ளிக் கிழங்கு

படம்
பெயரில் மட்டுமல்ல, குணத்திலும் இனிமையானது சர்க்கரைவள்ளிக்கிழங்கு. டயட் செய்கிறவர்கள், நீரிழிவுக்காரர்கள் போன்றோருக்கு கூடவே கூடாது  என அறிவுறுத்தப்படுகிற பட்டியலில் முதலிடம் கிழங்கு வகையறாக்களுக்கே. சர்க்கரைவள்ளிக் கிழங்கு மட்டும் விதிவிலக்கு. அப்படியா என  அதிசயிக்கிற வர்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன் அடுத்தடுத்து சொல்லப் போகிற தகவல்கள் நிச்சயம் வியப்பைக் கூட்டும். என்ன இருக்கிறது? (100 கிராமில்) ஆற்றல்          86 கிலோ கலோரி கொழுப்பு          0 கொலஸ்ட்ரால்  0 சோடியம்          55 மி.கி. பொட்டாசியம்   337 மி.கி. நார்ச் சத்து      3 கிராம் சர்க்கரை          4.2 கிராம் புரதம்          1.6 கிராம் ‘‘மாவுச் சத்து நிறைந்த வேர் காய்கறியான சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஃப்ளாவனாயிட்ஸ், ஆன்ட்டி ஆக்சிடன்ட், தாதுச் சத்து, நார்ச் சத்து நிறைந்தது....

சிறுநீரகக் கல்...

சிறுநீரகக் கல்... இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்! இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ ... ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

செல்பி பொண்ணு செல்பி பையன் - எல்லை தாண்டினால் டேஞ்சர் கண்ணு

ஹாய்' யுவர் வாய்ஸ் ச்சோ ஸ்வீட். எதாச்சும் பேசேன் கேட்கிறேன் இது சரண். 'வாவ்' நம்ம லைப்ல இப்படியொரு பர்ஷனா..காலையில் கண் விழிப்பதில் துவங்கி கனவில் விழுவது வரை எல்லாவற்றையும் சுனந்தா சரணின் காதுகளில் கொட்டினாள். அவளுக்கு மனம் லேசானமாதிரி ஒரு பீல். அவன் தன் மனம் முழுக்க வயலட் பூக்கள் நிரம்பி வழிவதாய் உணர்ந்தான். ராங்காலில் எதேச்சேயாக மாட்டிய பையன் இவ்வளவு நல்லவனா என இரண்டு பக்கமும் உருகி உருகி பிரண்ட்ஷீப் வளர்த்தார்கள். காதல் என்ற வார்த்தையை மறந்தும் இருவரும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் நட்பு என்ற அஸ்திரம் மனதின் ஆழம் பாய்ந்து அந்தரங்கம் வரை போனது. ஹாய் செல்லம், டேய் வாலுப் பையா என வார்த்தைகள் அன்பின் குழைந்து ஜில் ஆனது. இவருக்குமான இடைவெளியில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்த நீங்க, நாங்க தொலைந்து ஏய், நீ, டா, டி என சுருங்கி வார்த்தைகள் காணாமல் போனது. இவருக்குமே செல்போன் சொர்க்கம் ஆனது. ஸ்கூல், பஸ் ஸ்டாப், டியூசன், மிட் நைட் என இடம் பொருள் ஏவல் என எல்லாம் மறந்து பேசிக்களித்தனர். அவன் குரலை எப்பொழுது கேட்போம் என்று சுனந்தா...தொலைபேசியில் பேசாத நேரத்திலும் அவளது பதில்களை நினைத்...

சொர்க்கத்திலும் வேண்டும் சுதந்திரம் - மாத்தி யோசி

தலைநகரில் பிரபலமான ஐடி கம்பெனியில் வேலை பார்த்து ஆயிரங்களில் சம்பளம் வாங்குபவன் கணேஷ். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது சொந்த கிராமத்திற்கு வந்திருந்த கணேஷை பார்ப்பதற்காக ஊராரும், உறவுகளும் கூடினார்கள். ஆனால் கணேசுக்கோ தனது பால்ய நண்பர்களை பார்க்க வேண்டும் என்பதிலேயே முழு கவனமும் இருந்தது. பெருநகரில் அவன் வாழும் வாழ்க்கை, வாங்கும் சம்பளம் போன்றவற்றை நண்பர்களிடம் சொல்ல வேண்டும். அவர்கள் தனது பெருமையை கேட்டு, தன்னை பாராட்ட வேண்டும் என்பது மட்டுமே கணேசின் எண்ணம். அப்படியே தனது சித்தப்பா ஆறுச்சாமியுடன் கரட்டுப்பக்கம் போன கணேஷ், தனது பால்ய நண்பன் கண்ணப்பனை பார்த்தான். கல்உடைத்துக் கொண்டிருந்த இவனை கூப்பிட்டு நலம் விசாரித்து நமது பெருமைகளை சொல்ல வேண்டுமா? இப்படி நினைத்து விட்டு கண்டும் காணாமல் அங்கிருந்து செல்ல முயன்றான் கண்ணப்பன். ஆனால் எதேச்சையாக கணேசை பார்த்த கண்ணப்பனுக்கோ ஒரே மகிழ்ச்சி. ‘டேய் கணேசா, என்று கூச்சலிட்ட படியே ஓடி வந்தான் கண்ணப்பன். மாப்ள உன்னை பார்த்து எத்தனை வருஷமாச்சு? எப்படி இருக்கே? ஆர்வத்துடன் கேட்டான் கண்ணப்பன். இந்தியாவுல மிகப்பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியில நான் வேலை செய்...

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா?

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள். இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net . இதில் உங்களது பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண் ஆகிய தகவல்களை தர வேண்டும். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்ப...

ரத்த அழுத்தம், உடல் எடையை பரிசோதியுங்கள்

இதய நோய்க்கான காரணம் என்ன? இதய நோய் ஏற்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. சிலருக்கு பிறவியிலேயே ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. பலருக்கு அவர்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. சரியான உணவு, உடற்பயிற்சி ஆகியவை இல்லாததாலும், புகைப்பிடித்தல் போன்ற காரணங்களாலும் இதய நோய் ஏற்படுகிறது. எந்த அளவுக்கு ஆபத்தை நாம் எதிர்கொள்கிறோம், அந்த அளவுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதால் அதன் இடைவெளி மிகவும் குறுகலாகிவிடுகிறது. இவ்வாறு படியும் கொழுப்புகள் ‘பிளேக்ஸ்‘ என அழைக்கப்படுகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போதுதான் மாரடைப்பு ஏற்படுகிறது. அதிக ரத்த அழுத்தத்துக்கும், இதய நோய்க்கும் உள்ள தொடர்பு என்ன? ரத்தக் குழாய் வழியாக ரத்தம் செல்லும் போது, அதன் பக்கவாட்டு சுவர்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இதுதான் ரத்த அழுத்தமாக அளவிடப்படுகிறது. சிறிய ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து இடைவெளி குறுகும்போது, ரத்தத்தை உடலின் பற்ற பாகங்களுக்கு ‘பம்ப்‘ செய்ய இதயம் சிரமம்படுகிறது. குறுகிய ரத்தக் குழாய் வழியாக ரத்தம் பாயும் போது அழுத்தம் அதிகரித்து உயர் ...