இடுகைகள்

அக்டோபர் 12, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரபு சீமையிலே... - 10

படம்
அரபு சீமையிலே... - 10 Posted: 11 Oct 2009 05:02 AM PDT செல்வந்தர் வீட்டு செல்வங்களையெல்லாம் செவ்வனே வளர்க்க செவிலித் தாய்கள், நியமிப்பது அந்த ஊரின் வழக்கம்! அதற்கென கூலியும் கொடுப்பது பழக்கம்!! தகப்பனில்லாப் பிள்ளை - எனவே வளர்பணம் அதிகம் கிட்டாதென அருமைப் பிள்ளை முஹமதுவை பெருமை பொங்க வளர்த்திடவே யார்க்கும் எவர்க்கும் துணிவில்லை! சேர்த்து வளார்க்க மனமில்லை!! மெலிந்த கோவேறு கழுதை - மடிவற்றி நலிந்த ஒட்டகை தன்னை இழுத்தபடி இறுதியாக ஹலிமா வந்தார்! வளக்கவொரு பிள்ளை கிடைக்காமல் நொந்தார்!! பாலகர் முஹமதுவைக் கண்டார்! சேவகம் செய்ய மனம் கொண்டார்!! செய்கூலி குறைந்தாலும், சேதாரமின்றி நான் வளர்ப்பேன், என, மெய்யோடு மெய்யாக சேர்த்தணைத்தார் திருமலரை! சன்மானம் கிடைக்காவிட்டாலும் தன்மானம் காக்க வேண்டுமென, எடுத்துச் சென்றார் முஹமதுவை! ஏந்தல் ரசூல் அஹமதுவை!! அநாதையாம் முஹமதுவை அற்புத பிள்ளை அஹமதுவை பொக்கிஷமாய் அரவணைக்க், மார்பில் பால் சுரந்தது! ஒட்டகமும் மடு பெருத்து கரந்தது!! அனைவர் பசியும் தீர்ந்தது! அகமும் முகமும் குளிர்ந்தது!! களைத்துச் சோர்ந்திருந்த கோவே...