நலங்கு பாடல் - என்ன விலை அழகே
’என்’ எழுத்து இகழேல்
நலங்கு பாடல் - என்ன விலை அழகே Posted: 02 Oct 2009 05:05 AM PDT என் மகளின் ஆறாவது வயதில் காது குத்தியதற்கு வைத்த நலங்குக்காக எழுதிய பாடல். லாஃபிராமா மயிலே நல்ல மலரை சூடி வருவாய் மலர் மணத்தை நீயும் தருவாய் என் மகளை கண்டு வியந்து போகிறேன் - நான் நலங்கை பார்த்து பாடல் பாடினேன்! தவத்தால் கிடைத்த மணியே மலைத்தேன் அதனின் சுவையே முகத்தில் சிரிப்பும் இனிய கனவும் உன்னிடம் சேர்ந்தது என் விழி பார்த்தது தினமும் தினமும் இனிமை தொடர தித்திக்கும் மலைத்தேன் நீ வீட்டுக்கும் நீ ராணி! இனியென்றும் வரும் வெற்றியே இருளுடன் செல்லும் தோல்வியே ஒளிவட்டம் கொண்ட வாழ்வினில் உயிர்வரை நெஞ்சம் இனிக்குதே! மம்மியும் டாடியும் அன்று, பண்ணிய துவாவில் ஒன்று பெண்ணென வந்தது இன்று லாஃபிரா.... உன் வாழ்வுக்கில்லை ஈடு! (லாஃபிராமா மயிலே) இறையின் அருளை பெற்று நபியின் வழியில் நடந்து மறையை தினமும் உவந்து படிக்கும் மதிமுகம் நீயே தான் மாணிக்க கல்லே தான் நெறியின் முறையில் உயிரின் வரையில் உண்டாகும் உன் நேசம் மாறாத பூ வாசம்... கரும்பென கண்ணே இனிக்கிறாய் வரும்வழி வாசம் தருகி...