இடுகைகள்

ஜனவரி 18, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெற்றிலை மருத்துவ குணங்கள்..!

படம்
வெற்றிலை மருத்துவ குணங்கள்..! மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றி லையும் ஒன்றாகும். இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன்இலைக்காக பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது. இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி,சி...

வாய்ப்புண் ஏற்பட காரணங்கள், தடுக்கும் முறைகள்

படம்
வாய்ப்புண் ஏற்பட காரணங்கள், தடுக்கும் முறைகள் உலகத்தில் ஐந்தில் ஒருவர் வாய்ப் புண்ணால் அவதிப்படுகிறார் என்கிறது புள்ளிவிவரம். வாய்ப்புண் ஏன் ஏற்படுகிறது? வாயின் உட்புறம் மற்றும்  வெளிப்புறப் பகுதிகளில் உள்ள திசுத்தோல் பாதிப்படைந்து காயம் ஏற்படுவதைத்தான் வாய்ப்புண் என்கிறோம். உதடு, நாக்கு, கன்னங்களின் உட்புறம்  மற்றும் தொண்டைப்பகுதி போன்றவற்றில் வாய்ப்புண் வரலாம். இதில் ஏற்படும் வலி காரணாக பேசவோ உணவு உட்கொள்ளளவோ சிரமமாக  இருக்கும். பித்தம் அதிகரித்தால் வாய்ப்புண் வரும் என்கிறது சித்த மருத்துவம். ஜீரணக்கோளாறு உடல் சூடு, மன அழுத்தம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்  சி, பி 12 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற உயிர்சத்து குறைவு, உணவு மற்றும் மருந்துகள் ஒவ்வாமை, புகை, மதுப்பழக்கம் ஹார்மோன் மாறுபாடு  பற்கள் மற்றும் வாய்சுத்தமின்மை ஹெர்ர்பெஸ் வைரஸ் மற்றும் பாரம்பரியம் காரணமாகவும் வாய்ப்புண் வரலாம். வாய்ப்புண் 7 முதல் 10நாட்களில்  குணமாகிவிடும். நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் புண்கள் புற்றுநோயாகவும் மாறிவிடலாம். வாய்ப்புண் வராமல் தடுக்க என்ன செ...

சர்வரோக நிவாரணி உலர் திராட்சை!

படம்
சர்வரோக நிவாரணி உலர் திராட்சை! இனிக்கும் பழங்களில் ஒன்று திராட்சை. இதில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசு பழம் என்பார்கள். யுனானி வைத்தியத்தில் இந்த கிசுமுசு பழம் சர்வரோக நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்பு சத்தும் அதிகம் நிறைந்து உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்த பழம் அதிக மருத்துவ குணங்களை கொண்டது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழமிது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். திராட்சையில் கால்சியம், சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. திராட்சை பழத்தை இரவு உணவுக்குப்பின் பத்து பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும், பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் திகழ்வார்கள். ரத்...

மூட்டு வலியை விரட்டும் விளக்கெண்ணெய்!

படம்
மூட்டு வலியை விரட்டும் விளக்கெண்ணெய்! வயது முதிர்வு அடைந்தவர்களுக்கு பெரும் வேதனையாக இருப்பது மூட்டு வலி. தற்போது நச்சு கலந்த உணவு வகைகளால், இயற்கையில் விளையும் பொருளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதன்மூலம் பல்வேறு நோய்களும் ஏற்படுகிறது. இதனால் இளைஞர்களும் மூட்டுவலியால் அவதிப்படுகின்றனர். மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் ஏற்படும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணம் உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே ஆகும். நாளடைவில் இதுவே பெரிய நோயாக மாறும். இந்த மூட்டு வலியை நீக்க நமது அன்றாட உணவு முறைகளே போதுமானது. இயற்கையான சத்து நிறைந்த பொருட்களை சாப்பிடுவதன் மூலம் மூட்டு வலியை குணமாக்க முடியும். எலும்புகள் இணையும் பகுதிகளில் உழலும் தன்மை எளிதாக இருக்க எண்ணெய் பசை தேவை. இந்த எண்ணெய் “ஸ்லேஷக கபம்‘ என்ற திரவமாகும். எண்ணெய் பசை குறைந்து போனால், எலும்புகள் எளிதாக உராய முடியாது. அதனால், மூட்டு இயக்கம் தடைபடுவதோடு, வெப்பம் ஏற்படும். இந்த உராய்வினாலும், வெப்பத்தினாலும் வலி ஏற்படுகிறது. மூட்டு வலியின் தொடர்ச்சியாக உடல் இயக்கமும் பாதிக்கப்படுகிறது. ...