அரபு சீமையிலே... - 13
அரபு சீமையிலே... - 13 Posted: 26 Dec 2009 06:40 AM PST மாதவத்தால் வந்துதித்த மாணிக்கமாம் முகமதுவை சாதகமாய் மணமுடிக்க சம்மதத்தை வேண்டியந்த மாதவரும் குடும்பத்திலே பெரியராம் அபுதாலிபிடம், தூதுவிட்டார், துயரம் விட்டார் இனிய நாளில் மணம்முடித்தார். முகமதுக்கு இருபத்தைந்து வயது, கதிஜாவின் வயதோ நாற்பது! இவரை எங்ஙனம் ஏற்பது? என தயங்கவில்லை முகமது! ஏற்றிட மலர்ந்தது கதிஜாவின் முகமது!! ஐநூறு தினார் தங்ககாசும் இருபது பெண் ஒட்டகையும் என மஹர் கொடுத்து மணம்முடித்தார், மனிதர் குல புனிதர் நபி! செவிலித்தாய் ஹலிமாவையும் நன்முறையில் உபசரித்து, பரிசாய் பல கால்நடையும், அன்பளிப்பாய் உவந்தளித்தார். பெண்ணினத்தின் கண்மணியாய், வியனுலக நன்மலராய் ஒருமித்த தாம்பத்யம் - என ஒழுகி நின்றார் கதிஜாவும்!! காஸிம், அப்துல்லாஹ் என்ற இரு ஆண்மக்களும், ஜைனப், ருகையா உம்முகுல்தூம், பாத்திமா, என்று நான்கு பெண்மக்களும், கதிஜாவின் மணிவயிற்றில் உதித்து வந்த கண்மணிகள். ஆண்மக்கள் இருவருமே, இறப்பெய்த சிறுவயதில், பெண்மக்கள் நால்வருமே, சிறப்பாக வாழ்ந்தனரே! விக்கிரக வணக்கமும், வீணான பழக்கமும் ...