இடுகைகள்

அக்டோபர் 14, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளின் மனநிலை

படம்
’என்’ எழுத்து இகழேல் குழந்தைகளின் மனநிலை Posted: 13 Oct 2009 09:50 AM PDT "கண்ணா...வெளியே போனால், எதுவும் கேட்கக் கூடாது. அப்படினா வா... இல்லாட்டி வேண்டாம்.. வீட்டிலேயே இருந்துக்கோ" இப்படி நான் சொல்லிக் கொண்டிருந்த காலம் போய், "கண்ணா வெளியே போகலாம், வரியா?" "எனக்கு எதாவது வாங்கித் தர்ரதுனா வரேன், இல்லாட்டி வரல" இப்படி சொல்ல ஆரம்பித்தான் என் ஆறு வயது மகன் லாமின். பணத்தின் அருமை கொஞ்சமும் தெரியாமல், கண்ணில் கண்ட பொருளை எல்லாம் கேட்டு அடம் பிடிப்பான். அந்த பொருள் அவனுக்கு தேவையில்லை அல்லது உபயோகமில்லை என்று எடுத்து சொன்னாலும் கேட்பதில்லை. ஆனால்... ஆனால்...எங்கள் வீட்டு முருங்கை மரம் காய்க்க ஆரம்பித்த போது, அக்கம் பக்கம், உறவுகளுக்கெல்லாம் கொடுத்தது போக நிறையவே இருந்தது. அதை என்னவர், பக்கத்து கடையில் கொடுத்து காசு வாங்கி வர என் மகனிடம் சொல்ல, ரொம்ப ஆர்வமாக முருங்கைக்காய் விற்ற பணத்தை உண்டியலில் சேமிக்க ஆரம்பித்தான். எங்களிடம் காசு வாங்கி போய், கடையில் பலூன் போன்ற பொருட்கள் வாங்குவானே தவிர, முருங்கைக்காய்காசை தொட மாட்டான். அது தன் பணம...