வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்:-
வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்:- ------------------------------------------------------------------------------------------------------------- பொதுவாக வீட்டில் தரை, பாத்திரங்கள், துணிகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் ... செய்யும் பணி நடந்து கொண்டே இருக்கும். ஆனால் இவை எல்லாம் விட கிருமிகள் அதிகம் வாழும் சில விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றை பல வீடுகளில் சுத்தப்படுத்துவதே கிடையாது என்பதுதான் அச்சம் தறும் செய்தியாகும். முதலில், கால் மிதியடிகள் : ஒரு கால் மிதியடியை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்கிறீர்கள் என்று கேட்டால், பல இல்லத்தரசிகள் யோசித்துத்தான் பதில் சொல்வார்கள். ஆனால், கால் மிதியடிகள்தான் பல கிருமிகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டு அதனை நோயாகப் பரப்பி வருகின்றன. அடுத்ததாக, கதவுகளின் கைப்பிடிகள். அதிலும் கழிவறைக் கதவுகளில் உள்ள கைப்பிடிகள் கிருமிகளின் சொர்காபுரியாக இருக்கும். எனவே, பீரோ, பிரிட்ஜ், அறைக் கதவுகளின் கைப்பிடியை அவ்வப்போது சுத்தப்படுத்துங்கள். டிவி ரிமோட் : வீட்டில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருள் என்றால் அது ரிமோட்தான். எனவே, அதனை உலர்வான...