இது மனைவியை மயக்க மட்டும்தான்....
கல்யாணம் ஆகாதவர்கள் வேண்டுமானால் இதை யூஸ் பண்ணி பெண்களை மயக்க டிரைப் பண்ணலாம். மயக்குங்க ஆனா நீங்க மயங்கிடாதீங்க. பெண்களின் அன்பை பெறுவது எளிதுதான். இதோ அதற்கான வழிகள்….. 1. மதித்தல் வீட்டு வேலையைத் தவிர மற்ற துறைகளிலும் நிறைய சாதிக்க முடியும் என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மனைவியின் திறமையை மதியுங்கள் & ஊக்குவியுங்கள் வேற வழியில்லை வீட்டு வேலைகளை நீங்க தான் நண்பர்களே செய்ய வேண்டும்.. என்னை அடிக்க வர வேண்டாம் ஒகேவா? பெண்களை மயக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. முதல் ஐடியாவிற்க்கே சோர்ந்து போனா எப்படி? 2.கனவுகள் பெண்களுக்கென சில கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன.அந்த கனவுகளை சிதைத்து உங்கள் பின் வர வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றால் அமைதியாக வழிவிடுங்கள்.(நண்பரே நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது.. அவர்களின் கனவில் புடைவைகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதுதானே உங்கள் கேள்வி? இதல்லெல்லாம் ஒரு கேள்வியா என்ன? பேசாமல் புடைவைகளை வாங்கி கொடுங்கள்.)இது என்ன என் காசா பணமா? 3.வித்தியாசமான முறையில் சிந்தியுங்கள். மனைவிய...