இடுகைகள்

மார்ச் 2, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாடி வாழ்க்கை - 1

படம்
பாடி வாழ்க்கை - 1 Posted: 01 Mar 2010 07:22 AM PST அதென்ன பாடி வாழ்க்கை??? இப்படித்தான் நானும் குழம்பினேன்.... Citizenship Camp என்பதன் தமிழாக்கமாம்....! காலேஜ் கேம்ப்னா ஒரே ஜோரு தான்.....! ஐந்து நாட்கள் நடக்கிறது! இன்று தான் (மார்ச் 1, 2010) ஆரம்பம்....! கேம்ப்புக்காக, பலப்பல ஏற்பாடுகள் போனவாரமே தொடங்கியாச்சு! அதில் ஒன்று, காலேஜ் கிரவுண்ட் க்ளீனிங். மொத்தம் ஐந்து குரூப்புகள்....அதில் ஆளுக்கு இவ்வளவு என்று இடம் பிரித்துக் கொடுத்து விட, எல்லாரும் மம்மட்டி, சீமாறு, காரைச்சட்டி சகிதம் களத்தில் இறங்கினோம்....! உஸ்....அப்பாடா! நமக்கு பழக்கமில்லாத வேலையா? பட்டிக்காட்டுப் பக்கமிருந்து வந்தவங்கள்ளாம், தோட்ட வேலை ஏற்கனவே பழகியிருப்பதால், சக்கை போடு போட, எனக்கோ மூச்சு வாங்கியது! எங்க குரூப் இடத்தில் ஒரு ஏரியா அப்படியே க்ளீன் பண்ணப்படாமல் இருக்க, கல்லூரியில் வேலை செய்யும் ஆயா எனக்கு கை கொடுத்தார்கள். நான் அவ்வப்போது அவரை கவனித்துக் கொள்வதால், அவர் உதவினார். வெட்டிய சருகுகளையெல்லாம் நடுவில் போட்டு தீ மூட்டி, கேம்ப் ஃபயர் என்று ஒரே ஆட்டம்! களைப்பு தெரியாமல் இருக்க இடையிடையே ஜூஸ் சப்ளை வேற...