இடுகைகள்

டிசம்பர் 28, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அஜீரண கோளாறை விரட்ட மிக சிறந்த பத்து வழிமுறைகள்...!

படம்
இயற்கை முறையில் அஜீரண கோளாறை விரட்ட மிக சிறந்த பத்து வழிமுறைகள்...! அசிடிட்டி ஒரு சங்கடமான அனுபவமாகும். இந்த சந்தர்ப்பங்களில் நாம் சாதாரணமாக ஆன்டாஸிட் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் இதைத் தடுக்க வேறு இயற்கை முறைகள் உண்டு என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆகவே இதிலிருந்து மீள்வதற்கான 10 இயற்கை வைத்திய முறைகளை இங்கு பார்க்கலாம். 1.வாழைப்பழம் : வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது. அதி களவு, குறைவான அமிலத் தன்மை ஆகிய காரணங்களால் வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும். மேலும் இரைப்பையின் அக உறையில் சீதத்தன்மையை ஏற்படுத்தும் கூறுகளும் இதில் அடங்கி யுள்ளன. இந்த சீதத்தன்மை, வயிற்றில் அசிடிட்டி மூலம் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை விரைவுப்படுத்தி அசிடிட்டியைக் குறைக்க உதவும். அசிடிட்டி ஏற்படும் சமயத்தில், அதிகளவு பழுத்த வாழைப் பழத்தை சாப்பிட்டால், விரைவான தீர்வைப் பெறலாம். மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடை...

மனைவியை மயக்குவது எப்படி?

படம்
மனைவியை மயக்குவது எப்படி? கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே! கவலையே வேண்டாம்! சின்னச் சின்ன டகல்பாச்சி வேலைகளை செய்தாலே போதும்!! பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்!! ஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்!! இது ஆண்களுக்கு மட்டும். மகளிர் வண்டியில் நாங்க மறந்தும் ஏறினா பிண்ணிட்ரீங்க இல்ல. அதுபோல இது அப்பாவி அப்பாக்களுக்கு மட்டும்! 1. வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு ‘உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே! பாதிநாள் ‘செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!’ என்ன சரியா? 2. மனைவி முன்பே எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்! காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க! சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க. லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க. 3. எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்த துணி, பெட...

கணவன் மனைவி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள் கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன? வரவு, செலவை வரையறுப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை? 1. வருமானம் 2. ஒத்துழைப்பு 3. மனித நேயம் 4. பொழுதுபோக்கு 5. ரசனை 6. ஆரோக்கியம் 7. மனப்பக்குவம் 8. சேமிப்பு 9. கூட்டு முயற்சி 10.குழந்தைகள் கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன? 1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக் கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் 10. மனைவியின...

கிராமத்து அனுபவங்கள்:-

படம்
கிராமத்து அனுபவங்கள்:- 1) Dining டேபிள் இருந்தாலும் தரையில் உக்காந்து குடும்பமா சாப்புடுரத்துக்கு நிகர் ஆகுமா? 2) A /c வச்சி தூங்கினாலும் மதியம் நேரத்துல வேப்ப மர நிழலுல தூங்குற சுகம் வருமா? ... 3) தம்மா துண்டு showerla குளிக்குரதுக்கும் பக்கத்துல இருக்குற pumpsetல குளிக்குரதுக்கும் எவ்வளவு வித்தியாசம். 4) ஹாய் how ஆர் யு? கேக்குறதுக்கும் ஏலே மாப்புள எப்படி இருக்கன்னு கேக்குறதுக்கும் எம்ம்புட்டு வித்தியாசம் இருக்கு. இன்னும் ஏராளம்.... கிராமங்கள் இன்னும் மாறவில்லை... தங்களை மறந்து இன்னும் தங்கள் உரியவர்களுக்கே அன்பு செலுத்துகிறார்கள்.