LOVE
கடந்து போன போது..!! காதல் சொன்னபோது தந்த ரோஜா இறந்துவிட்டது அவள் தூக்கி எறிந்தபோது.. கொல்லப்பட்டது அவைகள் ஏறி சென்றபோது.. *************************** இறுக்கங்கள் தளர்த்தபட மனமில்லை நெருக்கங்கள் குறைக்கப்பட மனமில்லை தூரங்கள் அதிகப்பட மனமில்லை இருந்தாலும் வேறு வழியில்லை.. விடிந்துவிட்டது.. போய் பல் துலக்கு..!! ****************************** செல்லாதே என்னை விட்டு சில தூரம் போனாலும் தொடர முடியவில்லை உன்னை.. செல்லாதே என்னை விட்டு சில அடிகள் கடந்தாலும் பிரிய முடியவில்லை உன்னை.. செல்லாதே என்னை விட்டு சில மணித்துளிகள் நடந்தாலும் மறக்க முடியவில்லை உன்னை.. இப்படி எல்லாம் புலம்புகிறேன்.. நீ விடிகாலையில் கட்டில் விட்டு கடந்து போன போது..!!