இடுகைகள்

பிப்ரவரி 24, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பட்டி

படம்
கருப்பட்டி ****************** கருப்பட்டி என்றாலே உடன்குடி ஊரு தான் நினைவிற்கு வரும்.அந்தளவிற்கு பனைமரங்களும் பனை பொருள்களும் மிகுதியாக உள்ள ஊர்இது..ஆனால் திருநெல்வேலி சுற்றுப்புறங்களில் உள்ள நாட்டு கருப்பட்டியின் சுவை அலாதியானது. ... காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் . இருப்பதுடன்,அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும் கருப்பட்டி பணியாரம் சாப்பிட அற்புதமாக இருக்கும்..பாவூர் சத்திரம் . பஸ் ஸ்டாண்டில் ஒரு டீ க்கடையில் கருப்பட்டி பணியாரம் சாப்பிட்டேன்.சூப்பராக இருந்தது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு வலுப்பெருவது டன்,கருப்பையும் ஆரோக்கி-யமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுட...

பிரக்கோலி

படம்
ஆரோக்கியப் பெட்டகம்: பிரக்கோலி பிரக்கோலி என்கிற காயைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெளிநாட்டு வரவான இந்தக் காய் நம்மூருக்கு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும், அதன் பயன்பாடு இன்னும் பரவலாகவில்லை. நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே சமைத்துப் பரிமாறப்படுகிற காஸ்ட்லியான காயாக இருப்பதே காரணம். சமீப காலங்களில் பிரக்கோலியின் பயன்பாடு சாமானிய மக்களுக்கும் ஓரளவுக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பிரக்கோலி என்பது ஒரு வகை காய் என்ற அளவில் மட்டுமே நிற்கிறதே தவிர, அதை எப்படி சமைப்பது என்கிற தகவல்கள் பலருக்கும் புரியாத புதிர்தான்! ‘‘பிரக்கோலி இத்தாலி நாட்டை சேர்ந்த காய். இது முதலில் அந்த நாட்டில்தான் பயன்படுத்தப்பட்டது. இந்தக் காயைப் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாது. அறிமுகம் இல்லாத  இந்தக் காயில்  நிறைய ஆரோக்கியங்கள் உள்ளன. இது ஊட்டச்சத்துகள் நிறைந்த காய். வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கரோடின் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்தது. இது நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் ...

வரகு!

படம்
சிறப்புமிக்க சிறுதானியங்கள்: வரகு! 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரகு என்கிற  வரகரிசி இந்தியாவில் பயிரிடப்பட்டு வந்த சிறுதானியம். அப்போது நம் நாட்டில் இப்போது  உள்ளதைப்போல எல்லோரும் சுற்றிலும் அமர்ந்து சாப்பிடுவதைப் போன்ற சாப்பாட்டு மேஜை பழக்கங்கள் கிடையாது. ஆங்கிலேயர் வந்த பிறகே  இந்தப் பழக்கம் வந்தது. மத்திய தரக் குடும்பங்களில் கீழே அமர்ந்து சாப்பிடும் பழக்கமே இருந்தது. ஓரளவு செல்வந்தர்கள், ஜமீன்தார்கள் போன்றவர்கள் மட்டும் தனித்தனி  மேஜை நாற்காலிகளில் அமர்ந்து சாப்பிடுவர். ஓட்டல் என்று இல்லாதபோதும், வேறு விதமான உணவகங்கள் வந்தது எல்லாமே 17ம்  நூற்றாண்டுக்குப் பிறகுதான். அப்போதே சிறுதானியங்கள் இருந்தன. அவற்றை உண்ட நம் முன்னோர் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். கைக்குத்தல்,  புழுங்கல் அரிசியை உண்டு ஆரோக்கியமாகவே வாழ்ந்தனர். விஞ்ஞான முன்னேற்றம் கண்ட பிறகு, பன்னாட்டு உணவுகள் நம் வீட்டு மேஜையை  ஆக்கிரமித்த போது, விதவிதமான உணவுகளை ஓட்டல்களின் மூலம் உண்ண ஆரம்பித்த பிறகே, சிறிது சிறிதாக ஆரோக்கியக் குறைபாடுகள் வரத்  தொடங்கின. இயற்கை முறையில் விவசாயம்...

குதிரைவாலி

படம்
சிறப்புமிக்க சிறுதானியங்கள்: குதிரைவாலி அளவில் சிறியது  பயன்களோ அளவில்லாதது! தாய்ப்பாலில் இருந்து திட உணவுக்கு மாற, பலவிதமான சத்துமாவுகள் செய்ய சிறுதானியங்களை நம் முன்னோர் அதிகம் உபயோகித்தனர். இப்போது சிறு வயதிலேயே ஆரோக்கியக் குறைபாடுகள் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நல்ல சத்தான உணவை கொடுக்காததும் ஒரு காரணம். ஒரு கட்டிடத்துக்கு நல்ல அடித்தளம் எவ்வளவு முக்கியமோ, அதைப் போல ஆரோக்கியமாக வாழ சிறு வயதில் இருந்தே அடிப்படையான,  ஆரோக்கியமான, சத்தான, உயிர்ச்சத்துகள் நிறைந்த உணவு மிக அவசியம். அப்படிப்பட்ட உணவையே நமது முன்னோர் சிறுதானியங்கள் மூலம் சத்துமாவு தயாரித்து குழந்தைகளுக்கு கஞ்சியாக தந்தனர். இப்போது பலரும் சிறுதானியங்களுக்கு மாற ஆரம்பித்திருப்பது வரவேற்கத் தகுந்தது. குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல் நீக்கப்பட்டு கிடைக்கிறது. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது  என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலி. குதிரைவாலி மற்றும் பல சிறு தானியங்களை எப்படி பாதுகாப்பது? அதிக வெப்பமற்ற, இருண்ட அறையில் வைத்தால் பல மாதங்கள் வரை நன்றாக இருக்கும். ...

காளான்

படம்
ஆரோக்கியப் பெட்டகம்: காளான் நூறு சதவிகித அசைவ உணவுப் பழக்கமுள்ளவராக இருந்த சிலர், திடீரென சில பல காரணங்களுக்காக சைவத்துக்கு மாறலாம். அசைவம் வேண்டாமென மனசு சொன்னாலும் நாக்கு கேட்காது. சைவம் சாப்பிடத் தயார்... ஆனால், அசைவ மணமோ ருசியோ இருந்தால் போதும் என்கிறவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு காளான் சரியான சாய்ஸ். காளான் சேர்த்துத் தயாரான உணவுகளுக்கு நட்சத்திர ஓட்டல் அந்தஸ்தே உண்டு. விலையும் எக்கச்சக்கம். அதனால், மிகச் சுலபமாக அவற்றை வீட்டிலேயே வளர்த்து, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். காளானின் மகத்துவங்களைப் பற்றிய தகவல்களுடன், அதை வைத்துத் தயாரிக்கக் கூடிய 3 சுவையான உணவுகளையும் செய்து காட்டுகிறார் சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத். ‘‘காளான் என்கிற போதே பலரும் அசைவ உணவா என சந்தேகம் கொள்கின்றனர். இது 100% சைவ உணவு. மழைக்காலத்தில் அங்கங்கு முளைப்பது நாய்க்குடை எனப்படும் பூஞ்சைக் காளான். நாம் இதை உட்கொள்ளக் கூடாது. உலகில் நூற்றுக்கணக்கான காளான் வகைகள் உள்ளன. எல்லாவற்றையும் உட்கொள்ள இயலாது. சமையலுக்கு என்று தனியாக வளர்த்து கடைகளில் விற்பதை மட்டுமே உபயோகிக்க வேண்டும். தமிழ்நா...

வெள்ளை சோளம்

படம்
சிறப்புமிக்க சிறுதானியங்கள்: வெள்ளை சோளம் வெள்ளை சோளத்தை ஆங்கிலத்தில் Great millet (கிரேட் மில்லெட்) என்று அழைப்பார்கள். பெயருக்கேற்றபடியே சிறுதானியங்களில் சிறப்பான இடம் உண்டு இதற்கு. இதன் இன்னொரு பெயர் சொர்கம் (Sorghum). ‘மைலோ’ என்றாலும் வெள்ளை சோளத்தைத்தான் குறிக்கும். இதை தெலுங்கில் - ஜொன்னலு, இந்தியில் - ஜோவர், கன்னடத்தில் - ஜுலா என்றும் அழைப்பார்கள். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களுக்குப் பரிச்சயமானவை சிறுதானியங்கள் மட்டுமே. மிகவும் சுலபமாக வளரக்கூடியவை. 1966ம் ஆண்டுதான் ‘பசுமைப் புரட்சி’ என்ற பெயரில் அரிசி, கோதுமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். சிறுதானியங்கள் பயிரிட்ட 44 சதவிகித இடங்களில் இதை பயிரிட்டார்கள். உலக உற்பத்தியில் 42 சதவிகித சிறு தானியங்கள் இந்தியாவில் மட்டுமே பயிரிடப்படுகின்றன. இந்த சிறுதானியங்களை பயிரிடும்போது அரிசி, கோதுமையைப்போல அதிக தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. வாழை, கரும்பு பயிரிடும்போது உபயோகப்படுத்தும் தண்ணீரில் கால் பங்கு இருந்தாலே போதும். அதிக ஆழம் உழத் தேவையில்லை. அதிக உரமும் போட வேண்டிய அவசியமில்லை. இதற்கு ரசாயன உரம் போடாமல் இயற...

ஆரோக்கியப் பெட்டகம்: முள்ளங்கி

படம்
ஆரோக்கியப் பெட்டகம்: முள்ளங்கி முள்ளங்கியில் உள்ள சத்துகளையும் நல்ல விஷயங்களையும் பற்றி அறிந்தால், அது அத்தனை பேரின் உணவிலும் தினசரி இடம் பெறும் அவசியக்  காயாக மாறும். ‘‘வாசனை பிடிக்காமல் முள்ளங்கியை வெறுப்பவரா நீங்கள்? தலை முதல் கால் வரை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் நன்மை  செய்கிற முள்ளங்கியை வாசனைக்காக ஒதுக்குவது எத்தனை பெரிய தவறு தெரியுமா?’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ். ‘‘குறுக்கு வெட்டுக் காய்கறிகளில் முக்கியமானது முள்ளங்கி. வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ அதிகம் கொண்ட காய். இதிலுள்ள ஃபோலேட், நார்ச்சத்து,  தாதுச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகிய அனைத்தும் முதுமைத் தோற்றத்துக்குக் காரணமான விஷயங்களில் இருந்து  நம்மைக் காக்கக்கூடியவை. புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடிய குணம் முள்ளங்கியில் உள்ளது. முள்ளங்கியை பச்சையாகவோ, சமைத்தோ  எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். மாவுச்சத்து இல்லாத காய் இது என்பது குறிப்பிடத் தக்கது. சாலட்டுகளில் சேர்க்கும் போது, ஒருவித காரத்  தன்மையுடன், நறுக்கென்ற ருசியையும் ...

வெங்காயத்தாள் சிறப்பு அம்சங்கள்

படம்
வெங்காயத்தாள் சிறப்பு அம்சங்கள் வெங்காயத்தாள் மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாகும் மற்றும் அவைகள் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் மிகுந்த சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தகச்சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவைகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே கூட நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக உள்ளன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், புற்றுநோயை குணப்படுத்தும். வெங்காயத்தாள் க்யூயர்சிடின் போன்ற பிளேவோனாய்டுகளுக்கு ஒரு வலுவான ஆதாரமாக இருக்கின்றது. வெங்காயத்தாளின் பாக்டீரியா ...

ஆரோக்கியப் பெட்டகம்: வாழைப்பூ

படம்
ஆரோக்கியப் பெட்டகம்: வாழைப்பூ மருத்துவக் குணமும் மகத்தான மணமும் கொண்டது வாழைப்பூ. ஆனாலும், அது சமையலில் அரிதாகவே இடம்பெறுகிற ஒன்றாக இருக்கிறது.  வாழைப்பூவை சமைக்கத் தெரியாதவர்கள் ஒரு பக்கம் என்றால், வாழைப்பூவை ஆய்ந்து, சுத்தப்படுத்தி சமைப்பதற்கு அலுத்துக் கொண்டு அதைத்  தவிர்ப்பவர்கள் இன்னொரு பக்கம். அறியாமையையும் அலுப்பையும் தவிர்த்து வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களின்  வீடுகளில் ஆரோக்கியம் தாண்டவமாடும் என்பதில் சந்தேகமில்லை. வாழைப்பூவின் குணநலன்களை விளக்குவதோடு, அதை வைத்து சூப்பர்  உணவுகளையும் செய்து காட்டுகிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி மையத்தின் மருத்துவ அதிகாரி விஜயகுமார். ‘‘நமது உணவில் காய்கறிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய உணவு வகைகளில் எப்போதுமே  காய்கறிகள் ஒரு பகுதியாவது இடம்பெறுகின்றன. பெரும்பாலும் நமது உணவில் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கள் இடம்பெறுகின்றன. காய்கள் சேர்ந்த  உணவுக் கலவை அல்லது தொட்டுக்கொள்ளும் ஒரு உணவாக காய்கறி இடம்பெறுகிறது. சில காய்கறிகள் பொதுவாக நம...

இளமை, ஆரோக்கியத்துக்கு வாழைப்பழம்

படம்
இளமை, ஆரோக்கியத்துக்கு வாழைப்பழம்  ‘தினசரி ஒரு ஆப்பிள்; டாக்டர் வேண்டாம்’ என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான். எனினும், இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது: வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும். ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள ...

PRAN CARD

படம்