இடுகைகள்

அக்டோபர் 21, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வியக்க வைக்கும் வேர்க்கடலை !

படம்
உணவே மருந்து :- வியக்க வைக்கும் வேர்க்கடலை ! நிலக்கடலை குறித்த மூடநம்பிக்கைகள், அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டுப் பரப்பிவிடப்பட்டுள்ளன. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய் பிடிக்கும் பருவத்திற்குப் பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதைக் காணலாம். நிலக்கடலைச் செடியைச் சாப்பிடும் ஆடு, மாடு, நாய் வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் உடன் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நீரழிவு நோயைத் தடுக்கும் : நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உண...

பேஸ்புக்கில் உங்கள் நன்பர்களை மற்றவர்கள் பார்க்கமால் மறைப்பது எப்படி??

படம்
பேஸ்புக்கில் உங்கள் நன்பர்களை மற்றவர்கள் பார்க்கமால் மறைப்பது எப்படி?? பேஸ்புக்கில் உங்களுக்கு இருக்கும் நன்பர்கள் பட்டியலை நோட்டம் விட்டு, உங்கள் பெண் நன்பர்களுக்கு நட்பு அழைப்போ, தொந்தரவோ தர சில நபர்கள் இருக்கிறார்கள்,உங்கள் நேசமானவர்களை இந்த நாசமா போனவர்களிடமிருந்து காக்க நீங்கள் உங்கள் Friend list ஐ உங்களுக்கு மட்டும் தெரியும் வகையில் மறைத்து வைக்க வேண்டும். படி 1 : உங்கள் டைம்லைனிற்குள் சென்று கொள்ளுங்கள் (டைம்லைனிற்கு செல்ல உங்கள் பெயரினை க்ளிக் செய்க படி2 : Friends என்பதை க்ளிக் செய்க ( நீங்கள் இப்போது உங்கள் நன்பர்கள் பட்டியலுக்கு இழுத்து செல்லப்படுவீர்கள்) படி 3 : இங்கு வலது புறம் (Right side) Find friends ஆப்சன் அருகே உள்ள பென்சில் பட்த்தை க்ளிக் செய்க படி 4 :இரண்டு ஆப்சன் கள் கொடுக்கப்படும் அதில் edit privacy என்பதை க்ளிக் செய்யவும் படி 5: ஒரு பெட்டி ஓபன் ஆகும். இங்கு நீங்கள் உங்கள் நன்பர்கள், நீங்கள் Follow செய்யும் நபர்கள், உங்களை Follow செய்யும் நபர்கள் போன்ற முத்தரப்பு நபர்களை உங்கள் தேவைக்கேற்ப மறைத்து வைக்கும் ஆப்சன் கள் உள்ளன , அதில் Only me செலக்ட...

உங்கள் லேப்டாப் மற்றும் கணனியின் பாஸ்வேர்ட் மறந்துடுச்சா கவலையே படாமல் இதனைப்படியுங்கள்...

படம்
ஞாபக மறதி என்பது மனிதர்கள் அனைவருக்கும் இருக்கும். சில சமயங்களில் ஞாபக மறதி பாடாய் படுத்தும். 'நேத்துதான் புதுசா பாஸ்வேர்ட் மாத்தினேன்.. அதுக்குள்ள மறந்துடுச்சு' என்று புலம்புபவர்களும் உண்டு. அல்லது எப்பொழுதோ பயன்படுத்திய பழைய பாஸ்வேர்ட்அடிக்கடி மனசுக்குள், நினைவிற்கு வரும். ஆனால் என்ன செய்தாலும் புதிதாக மாற்றின பாஸ்வேர்ட் மட்டும் ஞாபகத்துக்கு வரவே வராது.. இப்படி நீங்கள் எப்பொழுதாவது கணினியின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு புலம்பியிருக்கிறீர்களா? அப்படின்னா கண்டிப்பா இந்த கட்டுரையை படிங்க.... "நான் மறக்கவே மாட்டேன்ப்பா.. எனக்கு பிரைன் மெமரி பவர் (Brain Memory Power)அதிகம்" என்று சொல்பவர்களுக்கு கூட கண்டிப்பாக இது பயன்படும். நீங்களும் படித்துப் பாருங்கள்.. உங்களோட நண்பர்களுக்கும் சொல்லுங்க. உங்களோட கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட் உங்களுக்கு அடிக்கடி மறந்து போய்விட்டால் என்ன செய்வது? அதற்கான தீர்வை இப்பொழுது பார்ப்போம். நிச்சயம் உங்களிடம் USB Pendrive இருக்கும். இதன் மூலம் உங்கள் பாஸ்வேர்டை உள்ளிட்டு கணினியை இயங்கச் செய்வது தற்போதைய புதிய தொழில்நுட்பமாக உள்ளது. அதாவது நீங்கள்...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!

படம்
பூண்டு : பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது. இஞ்சி : நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது. தயிர் : தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும். பார்லி, ஓட்ஸ் : பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா&க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். டீ, காபி : டீ மற்றும் காபி ஆகிய இரண்டுமே மூளையை சுறுசுறுப்படையச் செய்யு...

வைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்!

படம்
''எப்பவும் டயர்டா இருக்கு. சுறுசுறுப்பா எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும்னு தோணுது. ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்' இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது .   ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சுயமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள்தான் அதிகம். யாரெல்லாம் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம், வைட்டமின் மாத்திரைகளிலும் பக்கவிளைவுகள் உண்டா என்கிற நம் சந்தேகங்களை, டாக்டர் சாய்கிஷோர் முன் வைத்தோம். "கண் சற்று மங்கலாக இருந்தால் அதை உணவு மூலம் எப்படி சரி செய்யலாம் என யோசிப்பதை விட்டு விட்டு, ஏதாவது மாத்திரை தருமாறுதான் கேட்கின்றனர். பொதுவாக வைட்டமின்களை, நீரில் கரைபவை, கொழுப்பில் கரைபவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில், பெர...

சர்க்கரை நோயாளிகளுக்கு எமனாகும் பொன்னி அரிசி

படம்
சர்க்கரை நோயாளிகளுக்கு எமனாகும் பொன்னி அரிசி தற்போது நம்மவர்களை பயமுறுத்தும் முதல் கொடிய நோய் சர்க்கரை நோய் தான். சர்க்கரை நோய் வந்துவிட்டால் எண்ணை பண்டங்கள், இனிப்புகள் சாப்பிட முடியாது என்ற கவலை ஒரு புறமிருந்தால், இந்த நோய் மேலும் சில நோய்களுக்கு வாயிற் கதவாக இருப்பது மேலும் நம்மை அச்சத்தில்  ஆழ்த்தி உள்ளது. டாக்டரிடம் சென்றால், தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். டென்சன் ஆகாதீர்கள். இப்படி பல அறிவுரை  கூறுவார். ஆனால் கவனமாக இருப்பது நம் கையில் தான் உள்ளது. நம் நாட்டில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் ஏராளம் உள்ளது. நம்மவர்களின் மரபணுக்கள்தான் காரணம் என்று ஒரு  புறமும். நம்நாட்டின் தட்பவெப்ப சுற்றுச்சூழல்தான் பிரச்னையே என்று மறுபுறமும், உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டதை மறந்துவிடக் கூடாது  என்று கூடி பேசுவோர் மற்றொரு பக்கமும் நின்று பட்டிமன்ற பாணியில் விவாதித்து வருகின்றனர்.சர்க்கரை நோயை பற்றி சமீபத்திய ஆய்வு ஒரு  தகவல் கூறியுள்ளது. அதை பார்ப்போம்... ஒவ்வொரு உணவும் வயிற்றுக்குள் போய் ஜீரணமாகி, எவ்வளவு சீ...

சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்...!

படம்
''ஆண்டு தோறும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சர்க்கரை நோயைக் குறைப்பதற்கான உணவு எவை என்பது பற்றிய பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. உணவோடு, உடற்பயிற்சி, உடலுக்கு ஏற்ற எடை என சீரான வாழ்க்கையால் மட்டுமே... சர்க்கரை நோய் நெருங்கவிடாமல் செய்ய முடியும். சர்க்கரை நோய் வந்துவிட்டாலும், அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்'' என்கிறார் டாக்ட‌ர் கு.கணேசன். * வெந்தயம்: தினமும் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்பது ஓரளவுதான் உண்மை. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். இதில் உள்ள டிரைகோனெல்லின் என்ற வேதிப்பொருள் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மைக் கொண்டது. வெந்தயம் மட்டுமே சர்க்க்ரை நோய்க்கு மருந்து என்று நினைப்பது தவறு. தினமும் 100 கிராம் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. * தேன்: சிலர் சர்க்கரைக்கு பதில் வெல்லம் (அ) தேன் சேர்த்துக் கொள்வார்கள். இது தவறு. ரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிக்கும் அளவீடும் தேனுக்கும் சர்க்கரைக்கும் அதிக...