அரபு சீமையிலே... - 12
அரபு சீமையிலே... - 12 Posted: 03 Dec 2009 05:10 AM PST ஏற்றமிகு ஏந்தல் நபியின் போற்றத் தகுந்த சால்மைக்கு சாற்றும் உதாரணம் கேளீர்! நில்லென்று நிற்க சொல்லி, சென்ற நண்பர் மறந்துவிட, கல்லென நின்றார் அவ்விடத்தில் கடிதினங்கள் மூன்று! மறந்த நண்பர் திடுக்கூறாய் வர உறைந்து போனார் - வெட்கத்தால் குறைந்து போனார்! விரைந்து வராமையால் மனதால் மறைந்து போனார்!! சொன்ன சொல்லை காப்பாற்றும் அன்னவரின் நற்குணந்தான் இன்னதென செல்வம் பெற்ற வண்ணமகள் கதீஜாவின் கண்ணில்பட்டு, கருத்தில் பட்டு எண்ணத்திலே வளர்ந்ததன்று!! வர்த்தகத்தில் சிறந்திருந்தும், வாழ்வின் அர்த்தம் தொலைத்த விதவையவர்! குன்றிலிட்ட விளக்காக ஒழுக்கத்திலே சிறந்த மலர்!! குன்றாத வாணிபத்தை நன்றாக நடத்திவர மன்றோர்கள் வியக்கும்வண்ணம் பெருஞ்செல்வம்தன்னையெல்லாம் ஒன்றாக கட்டிகாத்து வென்றுலக புகழ்சேர்க்க, இட்டபணி செய்துவர கட்டழகர் முஹமதுவை நிர்வாகப் பொறுப்பிலேற்றி, சர்வாங்கமும் ஒப்படைத்தார். சரக்குடனே ஒட்டகத்தை, சிரியாவுக்கு கொண்டெடுத்து, தரத்தாலும் தளராத சொல் வளத்தாலும், பெரும் பொருள் ஈட்டு பெருமை சேர்த்தார், ...