சாயபு வீட்டு சரித்திரம் - 29
சாயபு வீட்டு சரித்திரம் - 29 Posted: 01 Dec 2009 09:52 AM PST (உலவும் மனிதர்களின் உண்மை கதை) எந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கையும் சோகமாகவே எப்போதும் இருக்காது. அதே போல சந்தோஷமும் நிரந்தரமாக தங்காது. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது தான் இயற்கையின் நியதி! இதில், துன்பத்தில் பொறுமை காப்பதும், இன்பத்தில் இறைவனை மறக்காமல் இருப்பதும் தான் அவசியமாக இருக்கிறது. சிலருக்கு இன்பத்துக்குப் பின் துன்பம் வருகிறது. அப்போது, வாழ்க்கையே சூனியமானது போல தோன்றுகிறது. சிலருக்கு துன்பத்துக்கு பின் இன்பம் வருகிறது. அப்போது, வாழ்க்கையே நந்தவனமாக பூத்துக் குலுங்குகிறது. இங்கும் அப்படித்தான்... மர்ஜி, ஆப்பி, பாஜி மூவரின் வாழ்க்கையிலும், வசந்தம் துளிர்த்த போது, வாழ்வே வண்ணமயமாக மாறிவிட்டது. மர்ஜிக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த கவர்ன்மெண்ட் போஸ்டிங் கிடைத்து விட்டது. அறிவியல் ஆசிரியை ஒருவர் ரிட்டயர்ட் ஆக, அவருடைய இடத்துக்கு மர்ஜி நியமிக்கப் பட்டாள். மர்ஜியாவின் கணவன் ஃபரீத் மூலமாக பெரிதாக எந்த ஒரு வருமானமும் இல்லாவிட்டாலும், மர்ஜியின் சம்பாத்தியத்தில் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது. ஆரி...