சாயபு வீட்டு சரித்திரம் - 27
சாயபு வீட்டு சரித்திரம் - 27 கவி தோன்றும் நேரம் Dawn - அதிகாலை சாயபு வீட்டு சரித்திரம் - 27 Posted: 19 Nov 2009 04:59 AM PST பாஜி தூக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டே இருந்தாள். தூக்கம் வராமல் போனதற்கு பலப்பல காரணங்கள். பிறந்த வளர்ந்த வீட்டை விட்டு விட்டு டவுனுக்கு குடியேறி விட்டனர். டவுனில் குடியேறியது நவீன கால தார்சு வீடாக இருந்தாலும், என்னமோ பிறந்த வளர்ந்த வீட்டை விட்டு வெளியேறியது மனதுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஞாபகங்களை சுமந்து நின்ற திண்ணையும், எண்ணக்குவியலோடு வண்ணக்கோலமிட்ட வாசலும், ஆயிரமாயிரம் விளையாட்டுக்களை கண்டு ரசித்த கூடமும், மன ஆழத்தின் பொக்கிஷங்களை பதுக்கி வைத்திருந்த கொட்டறையும், ஏக்கங்களையும் தாபங்களையும் கண்டு எள்ளி நகையாடிய உள்ளறையும், அவள் வாழ்வோடு ஒன்றிப் போயிருந்தன. தூக்கம் பிடிக்காமல் போக இன்னொரு முக்கிய காரணம் கமால். அழிச்சாட்டியமாக மனதில் வந்து அமர்ந்து, அவள் தனிமையோடு விளையாடிக் கொண்டிருந்தான். திருமணத்துக்கு இன்னமும் பதினைந்து நாட்கள் தான் இருந்தன. ஆனால், காதல் கொண்ட மனதுக்கு அது பதினைந்து யுகமாக தோன்றி, தூக்கத்தைத் தொலைக்க வைத்தது. அந்தகார இ...