’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் உங்கள் எழுத்துக்குப் பணம் வேண்டுமா? Posted: 16 Jun 2012 07:08 AM PDT கடைசியாக பதிவிட்டு ஒரு வருடம் கடந்துவிட்டது. பலப்பல மின்னஞ்சல்கள் பதிவிடக்கோரி. குறிப்பாக நிஜாம் அண்ணனுக்கு என் நன்றிகள். என் இனிய வாசகர்களை நான் இழந்துவிட்டது வருத்தம் தான். பலரும் நான் ஆசிரியைப் பணியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் இருப்பது எழுத்துத் துறையில் தான். அதுவும் இணையத்தில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழில் அல்ல ஆங்கிலத்தில். இசையில் ரசனையுள்ளவர்கள் இசையமைப்பாளர்களாகும் போது கரும்பு தின்ன கூலி கிடைப்பது போல மனமகிழ்வுடன் பணமும் கிடைக்குமே அதுபோல இப்போது என் பணி, என் மூச்சு, என் பொழுதுபோக்கு, ஏன் என் வாழ்க்கையே எழுதுவது என்று ஆகிவிட்டது. அதுவும், சாமானிய இந்தியர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு வருமானத்துடன்…. ஆர்வமுள்ள யாவரும் பணம் சம்பாதிக்கலாம் இத்துறையில். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏற்ற துறை இது. திறமை மட்டும் இருந்தால் போதும், திறம்பட செயல்புரியலாம். நான் ஒரு ஃப்ரீலான்சராகத் தான் என் எழ...