இடுகைகள்

மார்ச் 14, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொய்யா

படம்
மலிவான விலையில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று கொய்யா. இந்த பழம் மலிவானது மட்டுமல்ல; பல்வேறு நன்மைகளையும் கொண்டது. 4 ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரேயொரு கொய்யாப்பழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கும். இதில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவையாகும். கொய்யாப்பழத்தில் வைட்டமின் ‘பி‘ மற்றும் ‘சி‘ ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன. கொய்யாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். கொய்யாப்பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட, அப்படியே கடித்து சாப்பிட்டால், பற்களும், ஈறுகளும் வலுவடையும். ஈறுகளில் வீக்கம் அல்லது வலி இருந்தால், கொய்யா மரத்தின் இலைகளை தண்ணீ...