மனைவி செய்த சமையலை கண்டுபிடிக்க சில டிப்ஸ்...
கல்யாணம் ஆன புது மனைவி சமைப்பதை கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னுவதில் தப்பில்லை.மனைவி செய்த சமையலை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டியது: சாப்பிட்டது சாம்பார் ... என்று உறுதி செய்வது எப்படி ? மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம் பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான் என்று கிட்டதட்ட முடிவு செய்துவிடலாம், அதில் முருங்கைகாய், வெங்காயம் போன்ற காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக சாம்பார்தான். சில சமயம் வித்தியாசமாக செய்கிறேன் என்று அதில் தேங்காய் அரைத்து விடுவார்கள் அப்படி இருந்தாலும்அது கண்டிப்பாக சாம்பார்தான். ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம் குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில் துவரம் பருப்பு இருக்கா என்று உறுதி செய்து கொள்ளவும். சிலர் பாசிப்பருப்பும் போடுவார்கள். ரசம் என்று உறுதி செய்வது எப்படி ? நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும், மிகவும் தண்ணியாகவும் இருக்கும் அதில் காய்கறி இருக்காது,சில சமயம் துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம் தேவை, முதலில் காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின் ரசம் தான் என்ற முடிவுக்...