இடுகைகள்

மார்ச் 3, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாடி வாழ்க்கை - 2

படம்
பாடி வாழ்க்கை - 2 Posted: 02 Mar 2010 09:02 AM PST முதல் நாள் கேம்ப்பை விட இரண்டாம் நாள் கேம்ப் சூப்பர்! வழக்கமானபடி, சீஃப் கெஸ்ட்டெல்லாம் வந்து நிறைய்ய்ய பேசினார்கள்! திரு.செந்தில் என்பவர் உலக வெப்பமயமாதல் பற்றி பேசினார். இன்னொருவர் (பெயர் மறந்து போச்சு!) மரம் நடுவது பற்றி, பசுமை உலகம் பற்றியெல்லாம் பேசினார்! இறுதியில், எங்களிடம் இருந்து கருத்து கேட்டார்கள். நான் இவ்வாறு சொன்னேன், "ஐயா, காற்றில் பறக்கும் விதைகள் பல திசைகளுக்கும் பறக்கின்றன. அதில் சில உழவுக் காட்டில் விழுகின்றன. சில, மொட்டைப் பாறையின் மேல்! காட்டில் விழுந்த விதைகள் விருட்சமாகின்றன....! பாறையில் விழுந்த விதைகள் பட்டுப் போகின்றன. ஆக, குறை விதையின் மேல் அல்ல, அது விழுந்த இடத்தில் தான்....! இப்போ, நீங்கள் ஒரு விதை போட்டிருக்கிறீர்கள், எம்முடைய மனதில்! அது விருட்சமாவதும், வீணாவதும் எம் கையில் தான் இருக்கிறது. நாங்கள், உழவுக்காடாக இருக்கவே விரும்புகிறோம்!" நான் சொன்னதும், பலத்த கரகோஷம்....! சந்தோஷமாக இருந்தது! இடையில், பருப்பு வடை மற்றும் டீ! இன்று சப்ளை எங்க குரூப் (லில்லி குரூப்) பொறுப்பு என்பதால், என...