இடுகைகள்

செப்டம்பர் 8, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள் நீங்க

கண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள் நீங்க கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர சீக்கிரமே வறண்டு போகக் கூடியது. 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்கலாம். கண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம்.  மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் தரலாம். கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக சுலபமான காரணமாகி விடும். சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் ஆயில் உபயோகிக்கலாம்.  மோதிர விரலால் மிகமிக மென்மையாக மசாஜ் செய்து துடைக்கலாம். தேயிலையைக் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது போல தினமும் செய்யவும்.

கேரட் ஜூஸ் குடித்தால் இளைக்கலாம்

கேரட் ஜூஸ் குடித்தால் இளைக்கலாம் weight loss with carrot juice # கைப்பிடி அளவு கல் உப்பை சிறு மூட்டையாக முடிந்து, அரிசி மூட்டைக்குப் பக்கத்தில் வைத்தால் பூச்சிகள் அண்டாது. # அரிசி, காய்கறிகளைக் கழுவிய தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றினால் நன்றாகச் செழித்து வளரும். # காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டால் பூச்சிகள் வராது. # பச்சை மிளகாயைக் காம்பு கிள்ளி, செய்தித்தாளில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது. # ஆடைகளில் ஸ்கெட்ச் பேனாவால் கறை ஏற்பட்டால், நெயில் பாலிஷ் ரிமூவரைத் தேய்த்தால் கறை நீங்கும். # வெள்ளிப் பாத்திரங்கள் வைத்திருக்கும் பையில் சிறிது கற்பூரத்தைப் போட்டுவைத்தால் வெள்ளி கருக்காது. - செ. தீபாராணி, மேபூதகுடி, இலுப்பூர். # முட்டைகோஸை வேகவைத்து அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்துத் தலையில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து குளித்தால் முடி உதிர்வது குறையும். # படிகாரத்தைத் தண்ணீரில் கரைத்து, முகத்தில் தடவிவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறையும். # காஸ் அடுப்பில் சமைக்கும்போது தீயைக் குறைத்து வைத்துச் சமைத்தால் எரிபொருள் செலவு குறைவதுடன், சமைத்த ...

எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட் ஷார்ட் கட்

எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட் ஷார்ட் கட் EXCEL SHORTCUT CODE F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும். F2 +ALT+SHIFT :அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும். F3 +ALT+SHIFT :நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம். F6 +ALT+SHIFT :ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும். F9 +ALT+SHIFT: திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும். F10 +ALT+SHIFT: ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். F11 +ALT+SHIFT: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும். F12 +ALT+SHIFT : பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.