உங்கள் செல்போன் தொலைந்து விட்டதா?
உங்கள் செல்போன் தொலைந்து விட்டதா? கவலைப்படாதீர்கள் இனி கூகுளில் போனை தேடிக்கண்டுபிடிக்கலாம்!  ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்தால், இனி கூகுள் தேடுதளத்திலேயே அவை எங்கிருக்கிறது என்பதை தேடி கண்டுபிடிக்க முடியும். கூகுள் நிறுவனம் மிகத்திறமை வாய்ந்த தேடுபொறி தளத்துடன், தொழில்நுட்ப உலகில் களம் இறங்கியது. அதன்பிறகு படங்கள், வரைபடம், செய்திகள், மொழி பெயர்ப்பு என எண்ணற்ற வசதிகளை தந்து இணைய உலகில் ஜாம்பவானாக விளங்கி வருகிறது. தற்போது ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேகமாக ஒரு அப்ளிகேசன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை உங்கள் செல்போனில் நிறுவிக்கொண்டு, அதில் கூகுள் கணக்கின் வழியே உங்கள் ஸ்மார்ட்போன், டேப்லட், கணினி ஆகியவற்றின் தகவல்களை பதிவு செய்து வைக்க வேண்டும். பின்னர் எப்போதாவது போன், கணினியை வைத்த இடம் மறந்துபோனாலோ அல்லது தொலைந்து போனாலோ அவற்றை எளிதாக தேடி கண்டுபிடிக்கலாம். இதற்கு இருந்த இடத்தில் இருந்துகொண்டே வழக்கமாக கூகுள் தேடல் பக்கத்தில் ‘பைன்ட மை போன்’ (Find my phone) என்று தட்டச்சு செய்தால் போது...