ஆலிவ் எண்ணெய்
எந்த எண்ணெய் நல்ல எண்ணெய் என்கிற ஆராய்ச்சி இன்று வரை ஓய்ந்தபாடாக இல்லை. இத்தனைக்கும் இடையில் ஆரோக்கியத்துக்கு நான்தான் அத்தாரிட்டி என அமைதியாக ஊடுருவி வருகிறது ஆலிவ் ஆயில். இதயத்துக்கு நல்லது என்கிற உத்தரவாதத்துடன் விளம்பரப்படுத்தப்படுகிற ஆலிவ் ஆயில் உண்மையிலேயே ஆரோக்கியமானதுதானா? விளக்கம் அளிக்கிறார் இதய நோய் நிபுணர் சுபாஷ் ராவ்… ஆலிவ் எண்ணெய் உடல்நலத்துக்கு மிகவும் ஏற்றதுதான். இந்த எண்ணெயில் ஆரோக்கியத்துக்கு துணைபுரிகிற ஒலிக் ஆசிட்(Olic Acid) 55 சதவிகிதம் முதல் 83 சதவிகிதமும், லினோலிக் ஆசிட் (Linoleic Acid) 3.5 சதவிகி தத்திலிருந்து 21 சதவிகிதமும், பால்மிட்டிக் ஆசிட்(Palmitic Acid) 7.5 சதவிகிதம் முதல் 20 சதவிகிதமும், ஸ்டெரிக் ஆசிட் (Stearic Acid) 0.5 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதம் வரையும் லினோலெனிக் ஆசிட்(Linolenic Acid) 1.5 சதவிகிதமும் உள்ளன. இவை தவிர, ஸ்குவாலின் (Squalene) 0.7 சதவிகிதம், பைடோசிரால்ஸ் மற்றும் டோகோசிரால்ஸ் 0.2 சதவிகிதமும் காணப்படுகின்றன. தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு இந்த எண்ணெயை நெய்க்குப் பதிலாக அனைவரும் சாப்பிட்டு வரலாம். ஆலிவ் ஆயில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கு...