அயல்நாட்டு தீபாவளி
அயல்நாட்டு தீபாவளி Posted: 16 Oct 2009 09:28 PM PDT தாய்தந்தை தாள் பணிந்து கண்விழிக்கும் நன்னாளும் வாசலிலே நீர்தெளித்து, கோலமிட்டு முடிப்பதுவும், கிண்கிணியாய் சிரிப்பொலிக்க கிணற்றடியில் குளிப்பதுவும் வந்ததொரு நெடுங்கனவாய் இந்த திருநாளினிலே! தாயெங்கே, தந்தையெங்கே, கிணறெங்கே, சிரிப்பெங்கே? ஆனாலும் பெருநாளும் வந்தேதான் செல்கிறது! சந்தோஷம் எதுவென்று தேடித்தான் பிடித்தாலும் சம்சார சாகரத்தின் அலையிங்கு இல்லையடா!! பட்டாசு வெடிவெடித்து உற்சாகம் புரண்டோட, பட்டாடை சரசரக்க உற்றாரைக் காண்பதுவும், தோழியரின் கரம்பிடித்து ஊர்க்கதைகள் பேசுவதும் வந்ததொரு நெடுங்கனவாய் இந்த திரு நாளினிலே! பட்டாசு இருந்தாலும் வெடிவைக்க இடமில்லை, பட்டாடை அணிந்தாலும் பாழ்மனதில் நிறைவில்லை எட்டாத கனிக்காசை மனமெல்லாம் இப்போது! விட்டாலும் விலகாத எண்ணத்தில் தப்பேது? தாய் செய்யும் பட்சணத்தை நாம் திருடி வைத்திருந்து போய் ஒளிந்து தின்னும் போது நாவினிக்கும் தனிசுவைதான்! மாலையிலே குடும்பத்தோடு குதூகலிக்கும் நேரங்காலம், மங்கலாக மனவெளியில் குதியாட்டம் போடுதடா! உயிரெல்லாம் தாய்நாட்டில் உடல்மட்டும் அயல்கூ...