இடுகைகள்

நவம்பர் 17, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சின்ன சின்னதாய் "16"

http://tamilbayan.blogspot.com/ சின்ன சின்னதாய் "16" பசிக்கும்போது உண்ணா விட்டால்... நீ உண்ணும்போது உனக்கு பசிக்காது..!! ****************** சான்றோர் புத்திமதி கேளான்.. சறுக்கியதும் தானும் புத்திமதி சொல்ல தொடங்குவான்..?? ****************** போதைக்கு... ஒரு கோப்பை மது போதும்... தெளிவதற்கோ..? ****************** நீந்த கற்றுகொண்டால்.... இரும்பும் கூட நீரில் மிதக்கும்..!! ****************** பலமணிநேர சிந்தனவாதியின் வெற்றி.. நொடி பொழுதில் தீர்மானிக்க பட்டுவிடும்..!! ****************** நிலைப்பதாய் இருந்தால் நேசி... கிடைக்கும் என்றால் முயற்சி செய்..!! ****************** 'குப்பையை' பேசி.. கோபுரத்தில் சுகிக்கிறது ஒரு கூட்டம்..?! கோபுரத்தை கனவு கண்டு.. குப்பையிலேயே மடிகிறது ஒரு கூட்டம்..! ****************** எது சலிக்காமல் கிடைக்கிறதோ... அது விரைவில் சலித்து விடும்...!!? ****************** எத்தனை எழுதினாலும் தீரவே மாட்டேன் என்கிறது...? என் பேனா மையும்.... உன்னை பற்றிய கவிதைகளும்...!! ****************** கொண்ட...

நலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளா?

படம்
  நலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளா? Posted: 16 Nov 2009 06:31 AM PST என் மகள் லாஃபிராவுக்கு ஆறு வயதில் காது குத்தியதற்காக வைத்த நலங்கு வைபோகத்துக்கு எழுதிய பாடல். அன்பு லாஃபிரா திருநாளோ தந்தை தாய் கொஞ்சும் புது நாளோ எங்க பூந்தோட்ட மலர் தானோ தங்க தேனூற்றாய் இனிப்பாளோ நலங்கெனும் சடங்கில் தன்னை மறப்பாளோ மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ பிஞ்சு விரல் கொலுசொலி கேட்கிறதே! (அன்பு லாஃபிரா) பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள் ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் ஊட்டினாள் வாழும் வாழ்வில் அர்த்தம் கூட்டினாள் இரவும் பகலும் கவி பாடினாள் இதயம் மகிழ மலர் சூடினாள் நாய கத்தின் வழி நாடினாள் நீ கேட்ட நலங்கின்று பொன்மானே! நீ தூங்க மடி ஒன்று தருவேனே!! சொந்தங்கள் உனைச் சுற்றி வாழ்த்தாதோ?! பந்தங்கள் ராகங்கள் பாடாதோ!! அல்லாஹ்வின் அருள் சேருமே!! (அன்பு லாஃபிரா) புதிய மலர்கள் அவள் கூந்தலில், குறும்பு தெரியும் அவள் பார்வையில் தேனின் துளி அவள் பாதையில் கனவு நிறைந்திருக்கும் கண்களில் இதயம் மகிழ்வு கொள்ளும் ஆசையில் பாசம் பொங்கும் அவள் வார்த்தையில் மம்மியின் மனம் போல இருக்கின்றா...