நாகப்பட்டினமே
நாகப்பட்டினமே Posted: 06 Nov 2009 08:57 PM PST நாகப்பட்டினம் என்ற ஊர் பெயர் வரும்படி சினிமாப்பாடல் இருக்கா என்று நண்பரொருவர் கேட்க, அப்படி இல்லையென்று இதோ ஒன்றை நானே உருவாக்கினேன். அவரவருக்கு விருப்பமான மெட்டு போட்டுக் கொள்ளுங்கள். பல்லவி சிப்பியுண்டு முத்துமுண்டு சிந்தையள்ளும் கடலுமுண்டு நாகப்பட்டினமே - எங்க நாகப்பட்டினமே! உப்புமுண்டு மீனும் உண்டு மிதவை ஏற மார்க்கமுண்டு மரத்தை கட்டணுமே - மச்சான் மரத்தை கட்டணுமே!! அட, கட்டுமரத்ததான் கட்டுபுட்டோம் கடலுக்குள்ளே குதிச்சுபுட்டோம் கரையும் தெரியல - பிழைக்கும் வழியும் புரியல... (சிப்பியுண்டு) சரணம் சேர்த்து வெச்ச கஞ்சி தண்ணி, நெத்திலி மீனு கருவாடு சோத்த எல்லாம் தின்னுபுட்டு சோக்கா போன கடலுக்குள்ள, போயி ரெண்டு வாரமாச்சு, பாத்த விழி பூத்து போச்சு கருகமணி பொன்னுனக்கு கைவளவி கொண்டு வாரேன் என்று சொல்லி ஏங்க வெச்சு கடலுக்குள்ள போன மச்சான் ஊழிக்காத்து அடிக்கையிலே ஊனும் உயிரும் நடுங்குதைய்யா நீ பத்திரமா திரும்பிவர பாவி மனசு துடிக்குதைய்யா - இந்த பாவி மனசு துடிக்குதைய்யா! (சிப்பியுண்டு) தலைவாழ இலைபோட்டு, அழகழ...