இடுகைகள்

மார்ச் 17, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சொந்த கதை! நொந்த கதை!

படம்
சொந்த கதை! நொந்த கதை! Posted: 16 Mar 2010 08:42 AM PDT நேற்று காலேஜில் என்ன ஆச்சுன்னா..... காலங்காத்தால நல்ல தலைவலி..., முதல் நாள் ராத்திரி கண்ணு முழிச்சுப் படிச்சதுனால வந்த வினையோ என்னவோ, தைலத்தை எடுத்துத் தடவிக்கிட்டே உட்கார்ந்து இருந்தேன்...! செகண்ட் பீரியட் ஒன்னும் முடியல. எங்க இங்கிலீஷ் சார்கிட்ட சொல்லிட்டு கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைத்தேன். சார் வேற டெஸ்ட்னு சொல்லியிருந்தார். டெஸ்ட்ல இருந்து நான் தப்பிக்கிறேன்னு பிள்ளைங்களுக்குப் பொறாமை...! ரொம்ப முடியலைனு சொல்லிட்டு போய் கடைசி பெஞ்சில படுத்திட்டேன். பாவிப் புள்ளைங்க, "சார் சுஹைனாக்கா வேற படுத்திட்டாங்க (மொத்த இங்கிலீஷ் மேஜர் ஸ்டூடண்ட்ஸே 8 பேர் தான்)... அதனால, நாளைக்கு எல்லாரும் ஒன்னா டெஸ்ட் எழுதறோம், இன்னிக்கு நாங்க ரெக்கார்டு எழுதறோம்"னு பர்மிஷன் வாங்கிட்டு எழுதிட்டிருந்தாங்க... சார் போயிட்டார். எல்லாரும், மாற்றி மாற்றி, என்னை எழுப்பி, எதாவது ஒன்னு கேட்டுட்டே இருந்தாங்க... அப்ப, சிந்துன்னு ஒரு பொண்ணு, "அக்கா, உங்க பேனாவுல இருந்து கொஞ்சம் இங்க் ஊத்திக்கிட்டுமா அக்கா?"னு கேட்டா! ...