இடுகைகள்

டிசம்பர் 5, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடலை

கடலை ரசித்தபடி கடலைப் பார்த்தவாறு காற்றுவாங்கி கடற்கரையில் தோழியுடன் இருக்கையில் கடலை கடலை என்றான் சிறுவன்! கடலை பொட்டலம் வாங்கி கடலை சாப்பிட்டவாறே பேசிக்கொண்டிருந்தோம்! கடலைக் காணவந்தவன் ஒருவன் கடலைப் பார்த்தபடி அருகில் வந்து கடலையா.................? என்றான்! கடலை தான் கேட்கிறான் என்று கடலைப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு கடலைப் பார்த்தது போதுமென்று கடலை விட்டு நீங்கி செல்கையில் கடற்கரையில் கடலையா? எனக்கேட்டவன் கேட்ட கடலை என்னவென்று தோழி எனக்கொரு கடலை வகுப்பெடுத்தாள்! கடலை போடுவது பற்றி! கடலையில் இப்படியும் ஒரு வகையா? என கடற்கரையை நினைத்து நகைத்தேன்! கடலலைபோல் அவளும் சிரித்தாள்! நிலம் பார்த்தவாறு!

காதல் பாடம்...

உன்பெயர் சொன்னால் இன்னும் இனிமையாவது - தமிழ் நீ நுனி நாக்கில் பேசக் கொடுத்து வைத்தது - ஆங்கிலம் உன்னை தினம் ஒரு முறையாவது பார்க்க மனம் போடுவது - கணக்கு உன்னைப் பார்க்காமல் இயங்காது என் - உயிரியல் உன்னைப் பார்த்ததும் வயிற்றில் பட்டாம்பூச்சி - வேதியியல் நீ அருகில் வர வர அதிகமாகும் இதயத் துடிப்பு - இயற்பியல் காதலில் தோற்றவனுக்கு மறு தேர்வு இல்லை.. இது நீ எனக்கு சொல்லி கொடுத்த வரலாறு..

எனக்காக தானே எழுதின

என்னதான் பசங்க கட்டுக்கோப்பா மனசை வச்சு இருந்தாலுமே ஒரே ஒரு கால் பண்ணி நம்ம மனசை கவுத்திவிடுறாங்க... 1.சாப்பிடியாடா செல்லம்.. 2.உன்னோட எஸ்.எம்.எஸ்.ரொம்ப நல்லா இருந்ததுடா..எனக்காக தானே எழுதின.. 3.உனக்கும் எனக்கும் ஒரே டேஸ்ட் தெரியுமா.. 4.இன்னிக்கு நீ போட்டிருக்கிற சட்டை ரொம்ப சூப்பர்..நான் நாளைக்கு அதே கலர்தான் சுரிதார் போடப்போறேன்.. 5.கேன்-டீன்ல மீட் பண்ணலாம்டா செல்லம்.. 6.தியேட்டருக்கு போலாமாடா. 7.படிக்கும் போது கூட புத்தகத்துல உன் முகம் தெரியுதுடா.. 8.என்னோட பர்ஸ்ல எப்போதுமே உன் போட்டா இருக்கு தெரியுமா.. இன்னும் இதுபோல நிறைய இருக்கு.. ****************************** நகைச்சுவை:- காதல் என்பது.. "வேட்டைக்காரன்" பட டிரெயிலர் மாதிரி.. பார்க்கதவன் பார்க்க துடிப்பான்.. பார்த்தவன் சாகத்துடிப்பான்... ****************************** தத்துவம்:- காதல் வர காரணம் கண்கள்.. கண்களில் கண்ணீர் வர காரணம் பெண்கள்.. பெண்களின் இதயம் ஒரு செங்கல்.. அதை உடைக்க முடியாமல் தவிப்பது ஆண்கள்.. ****************************** கவிதை:- அத்தை பையன் என தோழிகளிடம் என்னை ...

குண்டாக ஆசையா... இதோ டிப்ஸ்

குண்டாக ஆசையா... இதோ டிப்ஸ் மெலிந்த உடல் பருமனாக எத்தனையோ மாத்திரைகளையும், பழம், காய்கறிகளையும் சாப்பிடுவோம். ஆனால் உடல் பருமனாக எளிதான வழி ஒன்று உள்ளது. அது தான் கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலை. பச்சை கொண்டைக் கடலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பருமனாகும். கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்களும் இதனை சாப்பிடுவது நல்லது. எண்ணிக்கையாக 10 முதல் 15 கொண்டைக் கடலைகளை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். திராட்சைப் பழம்: உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சைப் பழம் உதவுகிறது. உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சையை விட 8 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை அதிகரிக்கும். அதே திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேளை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

கண்டடைந்த கனவு

படம்
கண்டடைந்த கனவு Posted: 04 Dec 2009 09:25 AM PST "நான் அப்படியே நடந்து கொண்டிருந்தேன்...காலியான வகுப்பறைகளை நோக்கியபடி...ஒருவர் என்னிடம் கேட்டார், 'யாரைப் பார்க்க வேண்டும் என்று' அதற்கு நான் சொன்னேன், 'நான் வகுப்புகளை பார்க்க வந்தேன்; நான் அமர்ந்து ஆயிரமாயிரம் கதைகள் பேசிய பெஞ்ச்சுகளையும் டெஸ்க்குகளையும் பார்க்க வந்தேன்; பெருவிருட்சமாக வளர்ந்து இன்று கிளை பரப்பிக் கொண்டிருக்கும், அன்றைய வேப்பஞ்செடியை நலம் விசாரிக்க வந்தேன்; கைநீட்டி மழை வருகிறதா என்று பார்க்கும் சன்னல்களைப் பார்க்க வந்தேன்; அதோடு ப்ளாக் போர்டு, டஸ்ட்டர், உடைந்து போன சாக்பீஸ் துண்டுகள், போர்டின் கீழே சிதறி இருக்கும் சாக்பீஸ் பவுடர், போர்டின் மேல் எழுதியிருக்கும் பொன்மொழி, அங்கு மாட்டியிருக்கும் போட்டோ.... இன்னமும்....இன்னமும்.... என் நினைவலைகள் பின்னோக்கிச் செல்ல...என் கண்களில் அலையும் கனவுகளுடன் யாவையும் காணவே நான் இங்கு வந்தேன்! எனக்குத் தெரியும் இங்கு மனிதர்கள் யாருமில்லை என்று, ஆனாலும் மனிதர்களை விட இவை எம்மிடம் அதிகமாக உரையாடியவை, உறவாடியவை, எம் நேரத்தைக் களவாடியவை, எம்மோடு விளையாடியவை...