நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ்
நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ் நமது உடலில் உள்ள முக்கியமான பாகங்களில் நுரையீரலும் ஒன்று. இதில் உள்ள மூச்சுப்பைகளே சுவாசத்தில் பங்கு வகிக்கின்றன. நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் உயிருக்கு உலைவைக்கும் அளவுக்கு ஆபத்தானவை. குறிப்பாக புகைபிடிக்கும் பழக்கமும், சுற்றுச்சூழல் மாசுகளும் நுரையீரலை அதிகமாக பாதிக்க வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே அத்தகைய பாதிப்பு இருப்பவர்களுக்கும் வியாதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டு நல்ல நிவாரணம் கிடைப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ட்டின் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனைகளில் இதற்கான ஆய்வுகளை நடத்தி இதை கண்டுபிடித்து உள்ளனர். தினமும் குறைந்த பட்சம் 50 கிராம் அளவுக்கு குறையாமல் பீன்ஸ் உணவுகளை சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.