பாடி வாழ்க்கை - 4
பாடி வாழ்க்கை - 4 Posted: 07 Mar 2010 08:13 PM PST மூன்று நாட்கள் முழுவதுமாகப் போனதே தெரியவில்லை...! நான்காம் நாள் காலேஜ் கேம்ப்பில் காலை, திருமதி.ஷம்ஷாத் பேகம் மேடம் துவங்கி வைக்க, அன்று ஹாஸ்பிடல் விசிட் ப்ளான் செய்திருந்தார்கள். எல்லாரும் காலேஜ் பஸ்ஸில் ஏறி, அங்கிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இருந்த மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் சென்றோம். 5 நிமிட தூரம் தான் என்றாலும், அதற்குள் பஸ்ஸில் ஆட்டம் பாட்டம் ஆரம்பமாகி விட்டது. அங்கு, ஹாஸ்பிடல் இன் பேஷண்ட்ஸுக்குக் கொடுக்க, பழங்களும், பிரட் பாக்கிட்களும், காலேஜ் சார்பாக எடுத்துக் கொண்டோம். ஆனா, பாருங்க, ஒரு இன் பேஷண்ட் கூட அன்று இல்லை. நாங்க வருவோம்னு பயந்து போய், எல்லாரும் எஸ்கேப் ஆயிட்டாங்க போலிருக்குது:) அங்கு தலைமை டாக்டர் ரமணி அவர்கள் சிறிது நேரம் உரையாற்ற, பிறகு இரண்டு பெண் மருத்துவர்கள், எங்கள் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்கள். அடுத்ததாக, அங்கிருந்து ஒரு அரை கிலோமீட்டர் தூரம் வரை எய்ட்ஸ் ஒழிப்புப் பேரணி போனோம். கையில் சின்னச் சின்னதாக பேனர் ரெடி பண்ணி எடுத்து வந்திருந்தார்கள். ஆட்களே இல்லாத இடத்தில், 'நிலா' வ...