இடுகைகள்

ஜனவரி 24, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தகுதி இருந்தால் எல்லாம் உன்னை தேடி வரும்

இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் ஒரு முறை கிராமங்களை சுற்றிப் பார்க்க குதிரையில் கிளம்பிச் சென்றார்.அப்போது வயலில் ஒரே ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். மன்னர் அவரிடம்,''மற்றவர்கள் எல்லாம் எங்கே?''என்று கேட்க, விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்த பெண் ,''அவர்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்,'' என்று சொன்னார். ''அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் போகவில்லை?''என்று மன்னர் கேட்டார். ... அதற்கு அந்தப்பெண்,''மன்னரைப் பார்ப்பதற்காக ஒருநாள் கூலியை இழக்கும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை.எனக்கு ஐந்து குழந்தைகள்.அவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது.அதனால்தான் போகவில்லை,''என்றார். மன்னர் அவரது கையில் சில நூறு பவுண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு,''உங்களது நண்பர்களிடம் சொல்லுங்கள்.நீங்கள் எல்லாம் மன்னரைப் பார்க்க சென்றீர்கள்.ஆனால் மன்னரோ என்னைப் பார்க்க வந்தார் என்று..'' என கூறிவிட்டு சென்றார். எதையும் தேடி செல்லாதே தகுதி இருந்தால் எல்லாம் உன்னை தேடி வரும் !!!!

மூன்று விஷயங்கள்.!

மூன்று விஷயங்கள்.! 1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை... நேரம் இறப்பு வாடிக்கையளர்கள் 2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்... நகை பணம் சொத்து 3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது... புத்தி கல்வி நற்பண்புகள் 4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்... உண்மை கடமை இறப்பு 5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை... வில்லிலிருந்து அம்பு வாயிலிருந்து சொல் உடலிலிருந்து உயிர் 6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்... தாய் தந்தை இளமை 7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது... சொத்து ஸ்திரி உணவு 8.இந்த மூன்று பேர்களுக்கு மரியாதை கொடு... தாய் தந்தை ஆசிரியர்

புற்று நோயை முற்றிலும் அழிக்க, சிறந்த கை மருந்து :-

படம்
புற்று நோயை முற்றிலும் அழிக்க, சிறந்த கை மருந்து :- +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (F...

மருத்துவம்

படம்

எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது?

படம்
எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது? அறிவோம்... எல்லையிலிருந்து நாட்டைப் பாதுகாக் கும் ராணுவம் போல், ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஒரு எதிர்ப்பு சக்தி செயல்பட்டு நம் ஆரோக்கியத்தைப்  பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி பற்றி தொற்றுநோய் சிறப்பு மருத்துவரான ராமசுப்பிரமணியன் விளக்குகிறார்... வெள்ளை அணுக்கள் எனும் போர்வீரர்கள் நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத்தட்டுகள் ஆகியவை இருக்கின்றன. இதில் வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நோய்  எதிர்ப்பு சக்தியைத் தருபவை. அதனால், வெள்ளை அணுக்களுக்குப் ‘போர்வீரர்கள்’ என்று இன்னொரு பெயரும் உண்டு. இன்று சுற்றுப்புறச் சூழல்  மாசடைந்து இருக்கும் நிலையில் தண்ணீர், காற்று, உணவு, சக மனிதர்களுடன் பழகுவது என்று எந்த வடிவிலும் நோயை உண்டாக்கும் கிருமிகள் நம்  உடலுக்குள் ஊடுருவலாம். அந்த கிருமிகளை எதிர்த்துப் போராடி நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேலையையே வெள்ளை அணுக்கள்  செய்கின்றன. இரண்டு வகை சக்தி நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகையில் நமக்குக் கிடைக்கிறது. ஒன்று பிறவியிலேயே அ...

உங்கள் கணினியில் 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவது எப்படி?

படம்
வாட்ஸ் ஆப் செயலியை மொபைல்களில் மட்டுமல்லாது இனி கணினியிலும் பயன்படுத்தலாம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும். இந்தச் செயலியை மொபைல்களில் பயன்படுத்தும் அதே வேளையில் கணினியிலும் பயன்படுத்த பல பயனர்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்தனர். தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கேற்றார் போல, கணினியில் க்ரோம் ப்ரவுசரில் (Chrome) வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி? 1. முதலில் மொபைலில் இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியை மேம்படுத்த (update) வேண்டும் 2. அடுத்து, கணினியில், க்ரோம் ப்ரவுசரில் https://web.whatsapp.com என்ற பக்கத்திற்கு செல்லவும். அந்த பக்கத்தில், ஒரு கியூ ஆர் கோட் (QR code) காண்பிக்கப்படும். 3. உங்கள் மொபைலில், வாட்ஸ் ஆப் செயலியை இயக்கி, அதில் மெனுவிற்கு செல்லவும். 4. மெனுவில் wh...