குழந்தை பாடல் - இன்னிசை பாடி வரும்...
குழந்தை பாடல் - இன்னிசை பாடி வரும்... Posted: 09 Jan 2010 05:37 PM PST இரண்டரை ஆண்டுகளுக்கு முன், என் தம்பிமகன் தைசீர் அஹமது பிறந்த போது, நான் பாடிய தாலாட்டு! அன்புடன் ஆட்சி செய்ய ஒரு கண்மணி வந்ததடா... பாசத்தைக் குழைத்தெடுத்து ஒரு பைங்கிளி பூத்ததடா... உன்முகத்தைப் பார்க்கையில், உள்ளம் கொள்ளை போகுதே - தேனின் சுவையைப் போலவே கண்ணன் குரலும் இனிக்குதே... அத்தை பாடிடும் ஒரு பாடல் தான் அதைப் பாடப் பாட பிஞ்சு மனது குளிர்ந்திடுமே! (அன்புடன்) கண்ணுக்கு கண்ணாக நீ பிறந்து வந்தாயே! முகத்தோடு முகம் சேர்த்து, கனிமுத்தம் தந்தேனே! பூஞ்சிட்டை பார்த்திட, மனம் பரவசமானதே! தம்பியின் முகத்திலே அட, பெருமை பொங்குதே!! தொட்டில் நானும் ஆட்டுகிறேன், ஆரீ ராரி ராரோ! விழிகள் மூடி கனவுடனே, நீயும் தூங்கிடுவாய்!! அத்தை பாடல் கேட்டு தாளம்போடு இளமகனே!! (அன்புடன்) சந்தன சிலை போல, இளவரசன் கண்டேனே! உயிருக்கு உயிராக, உனைக் கொஞ்சி ரசித்தேனே!! பெற்றவர் வாழ்க்கையில் தனி அர்த்தம் சேர்ந்தது! உன்முகம் ரசிப்பதே புது வேலை ஆனது!! செல்லக் கண்ணன் தூங்கிடவே, ஆரீ ராரி ராரோ!! மெல்ல மெல்ல பாடு...