குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...
குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்... Posted: 28 Dec 2009 06:33 AM PST இல்லையொரு பிள்ளையென்று ஏங்கும் போது வந்துதித்த என் செல்லத்தங்கத்துக்கு, பன்னிரெண்டு வருடங்களுக்கு முன், நான் எழுதிய தாலாட்டு! அன்பு எனும் மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் லாஃபிரா கண்ணே தூங்கிடுவாய் தாலேலோ - நீ மனம் நிறைய களிப்புடனே மகிழ்ச்சியுடன் ஆடியபின் தனை மறந்து தூங்கிடுவாய் தாலேலோ தனை மறந்து தூங்கிடுவாய் தாலேலோ(அன்பு எனும்) பூவிதழால் புன்னகைத்து தாய்மனதைக் கொள்ளைகொண்டு பவுர்ணமியாய் ஒளிதருவாய் தாலேலோ - உந்தன் மழலையிலே எனை மயக்க குறும்பினிலே நீ கலக்க நிறைவுடனே உறங்கிடுவாய் ஆராரோ! நிறைவுடனே உறங்கிடுவாய் ஆராரோ!(அன்பு எனும்) இல்லையொரு பிள்ளையென ஏங்கும் போது வந்துதித்த லாஃபிராகண்ணே கண்மலர்வாய் தாலேலோ - உன் தேன்மொழியில் வாயொழுக தீந்தமிழில் பாட்டிசைக்க திருமகளே தூங்கிடுவாய் ஆராரோ! திருமகளே தூங்கிடுவாய் ஆராரோ! (அன்பு எனும்) கையிரண்டில் அள்ளிக் கொண்டு கன்னத்திலே கன்னம் வைத்து முத்தங்களை பொழிந்திடவே தாலேலோ - உன் பொன்னழகை பார்ப்பதற்கும் பூமுகத்தை ரசிப்பதற்கும் கண்ணிரண்டு போதவில்லை ஆராரோ! ...