’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் மழை விட்டாச்சு வாங்க எல்லாரும்.... Posted: 23 Jun 2010 07:28 AM PDT அது ஒரு அழகான நந்தவனம். பூத்துக் குலுங்கும் அழகிய பூக்களின் வாசனை அனைவரையும் ஈர்த்தது. ஓங்கி உயர்ந்த மரங்களின் ஒய்யாரக் கிளைகளில் ஒயிலான பறவைகள் எந்நேரமும் பாடிக் கொண்டே இருந்தன. அந்த நந்தவனத்தில் ஒரு சின்ன சுண்டெலி ஒன்று இங்குமங்கும் ஓடி சேட்டைகள் செய்து கொண்டிருந்தது. அது செய்யும் சேட்டைகளை ரசிக்க, மயிலினங்களும் மான் கூட்டங்களும் பச்சைக் கிளிகளும் பாடும் பறவைகளும் சிங்கங்களும் சிறும் சிறுத்தைகளும் அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தன. இவை அனைத்தையும் சுண்டெலி தன் நண்பர்களாக்கிக் கொண்டது. இவ்வாறு சந்தோஷமும் சங்கீதமும் நிறைந்திருந்த வேளையில், ஒரு நாள் லேசாக மழை தூற ஆரம்பித்தது. விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்ததால், அவ்வப்போது மட்டும் சுண்டெலி தலை காட்டிக் கொண்டிருந்தது. அதனால், அதை எதிர்பார்த்திருந்த அதன் நண்பர்களும் ஏமாற்றமடைந்து தாம் வருவதைக் குறைத்துக் கொண்டன. பின்பு தூறல், சாரலோடு கலந்த பெருமழையாக மாறியது. அதனால், சுண்டெலி போய், தன் பொந்தில் பதுங்கிக் கொ...