10 நிமிடத்தில் பல்வலி தீர!!!
மனிதனின் உடம்பில் மிகவும் கடினமான பகுதி எதுவென்றால் எலும்புகளும், பற்களும் தான். ஆனால் இப்பகுதிகளில் வலி ஏற்பட்டால் தாங்கிக் கொள்வதும் மிகவும் கடினமானது தான். பல்வலி வந்தால் ஒரு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எந்த பல்லில் வலி இருக்கிறதோ அந்த பல்லை சுற்றி வைத்துவிட்டு வாயை மூடிக்கொள்ளவும் சிறிது நேரத்தில் பல்வலி காணாமல் போய்விடும். எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகை நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கன்னதின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும் பற்களை பாதுகாக்க பாட்டி வைத்தியம் * பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். * ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரை த்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப் புகள் குறையும். * ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால...